Posts

Current Affairs

2 புதிய ராம்சர் தளங்கள் - பீகார்

ராம்சார் உடன்படிக்கையின் கீழ் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களின் உலகளாவியப் பட்டியலில் பீகாரின் இரண்டு ஈரநிலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பீகாரின் ஜமுய் மாவட்டத்தில் அமைந்துள்ள நாகி மற்றும் நக்தி பறவைகள் சரணாலயங்கள் தற்போது ராம்சார் உடன்படிக்கையின் கீழ் அங்கீகரிக்கப் பட்டு உள்ளன. * இதன் மூலம் நாட்டில் உள்ள உயர் அங்கீகாரம் பெற்ற நீர் தேங்கியுள்ள (ஈர நிலங்கள்) சுற்றுச்சூழல் அமைப்புகளின் மொத்த எண்ணிக்கை 82 ஆக உள்ளது. ஐக்கியப் பேரரசு நாடானது உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான (175) ராம்சார் தளங்களைக் கொண்டுள்ளது

Current Affairs

18வது மக்களவையில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியானது, வெற்றி பெற்ற வேட்பாளர்களில் அதிக சதவீதத்திலான பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு திரிணாமுல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் மொத்தம் 38% பேர் பெண்கள் ஆவர் என்ற நிலையில் இது நாட்டிலுள்ள எந்த அரசியல் கட்சியிலும் பதிவாகாத எண்ணிக்கையாகும். 18வது மக்களவையில் மொத்தம் 74 பெண் உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர் என்ற நிலையில் இது கடந்த பதவிக் காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 பாராளுமன்ற உறுப்பினர்களை விட குறைவாகும்.18வது மக்களவையில் 13.44% பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள் என்ற நிலையில் இது 1952 ஆம் ஆண்டு முதல் பதிவான அதிக விகிதங்களில் ஒன்றாகும். 17வது மக்களவையில் 78 பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர் என்ற நிலையில் இதன் பங்கு மொத்த எண்ணிக்கையில் 14% அதிகமாக இருந்தது. 16வது மக்களவையில் 64 பெண் உறுப்பினர்களும், 15வது மக்களவையில் 52 பெண் உறுப்பினர்களும் இருந்தனர். பல அறிக்கைகளின்படி, 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகையில் 48.41% பெண்கள் ஆவர்.

Current Affairs

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நோட்டா பதிவு

தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்திய போது, ஏறக்குறைய 4.67 லட்சம் வாக்காளர்கள் மேற்கண்ட எவரும் இல்லை (நோட்டா) என்ற விருப்பத் தேர்வினைத் தேர்வு செய்துள்ளனர். மாநிலத்திலேயே அதிகபட்சமாக ஸ்ரீபெரும்புதூரில் மொத்தம் 26,450 வாக்காளர்கள் நோட்டாவைத் தேர்வு செய்தனர் என்ற நிலையில் திண்டுக்கல் (22,120) மற்றும் திருவள்ளூர் (SC) (18,978) வாக்காளர்கள் நோட்டாவைத் தேர்ந்தெடுத்துள்ளனர். நோட்டா வாக்குகள் மிகவும் குறைவாக கன்னியாகுமரி (3,756), இராமநாதபுரம் (6,295) மற்றும் கடலூரில் (7,292) பதிவாகியுள்ளது. நோட்டா 19 இடங்களில் 1 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது. 2014 ஆம் ஆண்டு தேர்தலில், நோட்டா அறிமுகப்படுத்தப்பட்ட போது, தமிழகத்தில் சுமார் 5.7 லட்சம் வாக்காளர்கள் நோட்டா விருப்பத் தேர்வினைத் தேர்வு செய்தனர். 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 3.45 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே நோட்டா விருப்பத் தேர்வினைத் தேர்ந்தெடுத்தனர். * 2021 ஆம் ஆண்டில் 0.75 சதவீதமாகப் பதிவான நோட்டா, 2024 ஆம் ஆண்டு தேர்தலில் 1.07% ஆக பதிவாகியுள்ளதால் நோட்டா பதிவில் சரிவுப் போக்கு பதிவாகியுள்ளது

Current Affairs

2 new Ramsar Sites – Bihar

❖ Two of Bihar’s wetlands have been added to the global list of wetlands of international importance under the Ramsar Convention. ❖ The Nagi and Nakti bird sanctuaries, both located in Bihar’s Jamui district, are now recognised under the Ramsar Convention. ❖ This taking the total number of highly recognised waterlogged ecosystems in the country to 82. ❖ The United Kingdom has the world's largest number (175) of Ramsar Sites.

Current Affairs

Women MPs in 18th Lok Sabha

❖ Trinamool Congress boasts of the highest percentage of female MPs among its winning candidates. ❖ A total of 38% of Trinamool MPs this year are women, the highest among any political outfit in the country. ❖ The 18th Lok Sabha is set to witness a total of 74 female members, a dip from the 77 MPs elected in the last term. ❖ The 18th Lok Sabha will have over 13.44% women MPs, one of the highest proportions since 1952. ❖ The 17th Lok Sabha had the most women MPs at 78, which was over 14% of the total. ❖ The 16th Lok Sabha had 64 women members, while the 15th one had 52. ❖ According to reports, women constituted 48.41 % of India’s population in 2022

Current Affairs

NOTA in Lok Sabha election 2024

Nearly 4.67 lakh voters opted for None of the Above (NOTA) while exercising their franchise in the 2024 Lok Sabha election in Tamil Nadu.  ❖ In Sriperumbudur, a total of 26,450 voters chose NOTA, the highest in the State, followed by Dindigul (22,120) and Thiruvallur (SC) (18,978). ❖ The number of votes polled by NOTA was lowest in Kanniyakumari (3,756), Ramanathapuram (6,295) and Cuddalore (7,292). ❖ NOTA received more than 1% of the votes in 19 seats. ❖ In the 2014 election, when NOTA was introduced, nearly 5.7 lakh voters chose the option in Tamil Nadu. ❖ Only 3.45 lakh voters chose the option in the 2021 Assembly election.

Current Affairs

100 சதவிகித பழச்சாறுகள் என்ற கோரல்கள்

உணவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை அமைப்பான இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சங்கமானது (FSSAI), கலன்களில் அடைக்கப்பட்ட பொருட்களில் 100 சதவீத பழச்சாறுகள் உள்ளது எனக் குறிப்பிட வேண்டாம் என்று நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. மேலும் இந்த அனைத்துப் பழச்சாறுகளிலும் அதிக அளவு தண்ணீரே உள்ளது. சிறிதளவு பழச்சாறு அல்லது பழக்கூழ் சேர்ப்பதால் அவை 100 சதவீதம் பழச்சாறு கொண்டதாக ஆகாது. மேலும் இந்த பழச்சாறுகளில் ஒரு கிலோவுக்கு 15 கிராமிற்கு மேல் சர்க்கரை அளவு இருந்தால், நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை இனிப்பு சாறு என்றே பெயரிட வேண்டும்.

Current Affairs

இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை புதுப்பிப்பு

இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழுவானது, ரெப்போ விகிதத்தை தொடர்ந்து 8வது முறையாக 6.5% ஆகவே மாற்றாமல் நீடிக்க முடிவு செய்துள்ளது. மேலும் இது 'பணப் புழக்கத்தினைக் குறைத்தல்' என்ற நிலைப்பாட்டை தொடரவும் முடிவு செய்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியானது 2025 ஆம் நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக் கணிப்பினை, முன்னதாக கணிக்கப்பட்ட 7 சதவீதத்திற்கு மாற்றாக 7.2 சதவீதமாக உயர்த்தியுள்ளது. மத்திய வங்கியானது 2025 ஆம் நிதி ஆண்டிற்கான பணவீக்க முன்னறிவிப்பை 4.5% ஆக வைத்துள்ளது.

Current Affairs

உள்நாட்டுக் காற்றுத் தரக் கண்காணிப்பு அமைப்பு

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது (MeitY), AQ-AIMS எனப்படும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட காற்றுத் தரக் கண்காணிப்பு அமைப்பினை தொடங்கியுள்ளது என்பதோடு புது டெல்லியில் Air-Pravah என்ற செயலியை அறிமுகப் படுத்தியுள்ளது.'Air-Pravah' என்ற கைபேசி செயலியானது நிகழ்நேரக் காற்றுத் தரக் குறியீட்டு (AQI) கண்காணிப்புத் தகவலை வழங்குகிறது. இது 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ் குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட ஒரு செயலியாகும்.

Current Affairs

RBI Monetary Policy update

❖ The RBI’s Monetary Policy Committee (MPC) decided to keep the benchmark repo rate unchanged at 6.5% for the eight consecutive time. ❖ It also decided to continue with its stance of ‘withdrawal of accommodation’. ❖ RBI raised its GDP growth forecast for FY25 to 7.2% from 7% earlier. ❖ The central bank retained FY25 inflation forecast at 4.5%.