அந்நியச் செலாவணி கையிருப்பு - ஜூன் 2024
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆனது மே 31 ஆம் தேதியன்று நிலவரப் படி அதிகபட்சமாக 651.5 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. அந்த வாரத்தில் பதிவான கையிருப்பானது 4.8 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது என்ற நிலையில் இது கடந்த இரண்டு மாதங்களில் ஏற்பட்ட உயர்வை விட மிகப்பெரிய உயர்வு ஆகும். இவை அதற்கு முந்தைய வாரத்தில் 2 பில்லியன் டாலர் அளவிற்குக் குறைந்திருந்தது.