Posts

Current Affairs

World's largest grain storage plan 2024

❖ Under the pilot phase of the ambitious World’s Largest Grain Storage Plan in the cooperative sector, godowns have been successfully constructed at Primary Agricultural Credit Societies (PACS) in 11 states across India.  ❖ These include Maharashtra, Uttar Pradesh, Tamil Nadu, Karnataka, Gujarat, Madhya Pradesh, Uttarakhand, Assam, Telangana, Tripura, and Rajasthan. ❖ It has achieved a total storage capacity of 9,750 metric tonnes. ❖ Now the government has extended the project over 500 additional PACS across the country.

Current Affairs

எண்ணிம வேளாண்மை திட்டம் 2024 - புதிய மைல்கல்

 எண்ணிம வேளாண்மை திட்டத்தின் கீழ் மிகவும் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டிய இந்தியாவின் முதல் மாநிலமாக குஜராத் மாறியுள்ளது. இம்மாநில அரசானது, இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 25 சதவீத விவசாயிகளுக்கு 'உழவர் அடையாள அட்டைகளை' உருவாக்கியுள்ளது. அந்த மாநிலத்தின் நிலப் பதிவு அமைப்புடன் செயல்பாட்டு ரீதியாக இணைக்கப்பட்ட மற்றும் ஆதார் அடிப்படையிலான உழவர் அடையாள அட்டையானது, நில உரிமை விவரங்களில் குறிப்பிட்ட மாற்றங்களுடன் சில புதுப்பிப்புகளை உறுதி செய்கிறது.  பிரதான மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 9 சதவீத விவசாயிகளுக்கு மத்தியப் பிரதேசம் உழவர் அடையாள அட்டைகளை உருவாக்கியுள்ள ஒரு நிலையில் அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் அங்கு 2 சதவீத விவசாயிகளுக்கு உழவர் அடையாள அட்டைகளை வழங்கியுள்ளது.  உத்தரப் பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் இராஜஸ்தான் உள்ளிட்ட பிற மாநிலங்களும் இந்த முறையை செயல்படுத்தத் தொடங்கியுள்ளன.

Current Affairs

Digital Agriculture Mission 2024 Milestone

❖ Gujarat has become the first state in India to achieve a significant milestone under the Digital Agriculture Mission. ❖ It generated 'Farmer IDs' for 25 per cent of the targeted farmers in the state. ❖ The Farmer ID, dynamically linked to the state’s land records system and based on Aadhaar, ensures seamless updates with changes in land ownership details. ❖ Madhya Pradesh has generated Farmer IDs for 9 per cent of its farmers registered under PM KISAN, followed by Maharashtra at 2 per cent. ❖ The other states, which includes Uttar Pradesh, Assam, Chhattisgarh, Odisha, and Rajasthan, have also begun implementing this system.

Current Affairs

பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு வரி

தமிழக மாநில அரசானது, 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின் கேளிக்கை வரி சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவினைச் சட்டசபையில் தாக்கல் செய்துள்ளது. நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும் நிகழ்ச்சிகளில் 10% கேளிக்கை வரி விதித்திட என்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தத் திருத்தம் மேற்கொள்ளப் படுகிறது. இதில் கல்வி நிறுவனங்கள் உட்பட எந்தவொரு நிறுவனத்தினாலும் நடத்தப்படும் இசைக் கச்சேரிகள், நாடகங்கள் மற்றும் பிற நிகழ்வுகளும் அடங்கும். தற்போது வரை, இது போன்ற நிகழ்வுகளில் கேளிக்கை வரி எதையும் விதிப்பதற்கும் வசூலிப்பதற்கும் எந்தவொரு விதிமுறையும் இல்லை.

Current Affairs

Tax for entertainment shows

❖ The state government has tabled a bill in the Assembly to amend the Tamil Nadu Local Authorities Entertainments Tax Act, 2017. ❖ The proposed amendment aims to empower the local bodies to levy a 10% entertainment tax on event where an admission fee is charged. ❖ It includes concerts, dramas, and other events conducted by any institution, including educational institutions, ❖ At present, there is no enabling provision for the levy and collection of the entertainment tax in such cases.

Current Affairs

கடலடிக் கம்பிவடங்களின் தாங்குந் திறன் தொடர்பான சர்வதேச ஆலோசனைக் குழு

சர்வதேச கம்பிவடங்கள் பாதுகாப்புக் குழு (ICPC) ஆனது, கடலடிக் கம்பிவடங்களின் தாங்குந் திறன் தொடர்பான சர்வதேச ஆலோசனைக் குழுவை உருவாக்கியுள்ளது. பழமையான உள்கட்டமைப்பு, அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் சார்ந்த அச்சுறுத்தல்கள் மற்றும் உலகளாவிய கம்பி வட நிறுவல் அதிகரிப்பு ஆகியவற்றால் ஏற்படும் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதனை இந்த அமைப்பு நோக்கமாக உள்ளதுகொண்டுள்ளது. 40 உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஆலோசனைக் குழுவில் அமைச்சர்கள், ஒழுங்கு முறைத் தலைவர்கள் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு தொலைத்தொடர்பு நிபுணர்கள் இடம் பெற்றுள்ளனர். மும்பை, சென்னை, கொச்சி, தூத்துக்குடி மற்றும் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள 14 தரையிணைப்புக் கட்டுப்பாட்டு நிலையங்களில் சுமார் 17 சர்வதேச கடலடிக் கம்பி வடங்களை இந்தியா கொண்டுள்ளது.

Current Affairs

International Advisory Body for Submarine Cable Resilience

❖ The International Cable Protection Committee (ICPC) have jointly launched the International Advisory Body for Submarine Cable Resilience. ❖ This body aims to address the challenges posed by ageing infrastructure, growing environmental threats, and increasing global traffic. ❖ The 40-member advisory body includes ministers, regulatory heads, and telecom experts from across the globe. ❖ India hosts around 17 international subsea cables across 14 distinct landing stations located in Mumbai, Chennai, Cochin, Tuticorin, and Trivandrum.

Current Affairs

ஆத்ம நிர்பர் தூய்மை/நோயில்லாத் தாவரத் திட்டம்

இந்தியா மற்றும் ஆசிய மேம்பாட்டு வங்கி (ADB) ஆகியவை இணைந்து 98 மில்லியன் டாலர் மதிப்பிலான கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இது தோட்டக்கலைப் பயிர் விவசாயிகளுக்குச் சான்றளிக்கப்பட்ட நோய் இல்லாத நடவு (தாவரங்களை) பொருட்களை அணுகுவதற்கான வாய்ப்பினை மேம்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் ஆனது தாவரங்களின் ஆரோக்கிய மேலாண்மையை மேம்படுத்தும் இந்திய அரசாங்கத்தின் ஆத்மநிர்பர் நோயிலா தாவரத் திட்டத்திற்கு (CPP) நிதி ஆதரவு என்பதனை ளிக்கிறது. CPP என்பது ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுத் (MIDH) திட்டத்தின் ஒரு பகுதி ஆகும். ADB வங்கியின் 50% நிதியுதவியுடன் 2024 முதல் 2030 ஆம் ஆண்டு வரை இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். வேளாண் நிலத்தில் மொத்தம் 18% பகுதிகளில் தோட்டக்கலைப் பயிர்கள் பயிரிடப் படுகிறது என்பதோடு அது வேளாண் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மீது மொத்த மதிப்பில் 33% பங்கினைக் கொண்டுள்ளது.

Current Affairs

Atma Nirbhar Clean Plant Program

❖ India and the Asian Development Bank (ADB) signed a $98 million loan deal. ❖ It aims to improve the horticulture crop farmers’ access to certified disease-free planting materials. ❖ The project supports the Government of India’s Atmanirbhar Clean Plant Programme (CPP) that enhances plant health management. ❖ CPP is part of the Mission for Integrated Development of Horticulture (MIDH). ❖ It will be implemented from 2024 to 2030 with 50% financial assistance from ADB. ❖ Horticulture occupies 18% of agricultural land and accounts for 33% of the gross value of agricultural GDP.

Current Affairs

ஆலத்துடையான்பட்டி கோயிலில் தமிழ் கல்வெட்டுகள் கண்டெடுப்பு

தமிழ்நாடு மாநிலக் கல்வெட்டுப் பிரிவு ஆனது, திருச்சி மாவட்டம் துறையூர் அருகே ஆலத்துடையான்பட்டியில் உள்ள அருள்மிகு சோமநாதர் கோயிலில் இருந்து கண்டு எடுக்கப்பட்ட இரண்டு கல்வெட்டுகளின் பொருளினைச் சமீபத்தில் அறிந்துள்ளது. இந்தக் கல்வெட்டுகள் சோழர் காலத்தைச் சேர்ந்தவையாகும். தமிழில் எழுதப்பட்ட இந்த இரண்டு கல்வெட்டுகளும் மிகச் சமீபத்தில் வல்லுநர்களால் புரிந்து கொள்ளப் பட்டு 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனக் கண்டறியப்பட்டது. ஒரு கல்வெட்டில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு திருஞானசம்பந்த பண்டிதர் கோயிலில் திருப்பணி நடத்துவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறித்த தகவல் உள்ளது. இது சோழ மன்னன் மூன்றாம் இராஜராஜன் காலத்தைச் சேர்ந்தது. மற்றொரு கல்வெட்டில் நாட்டார் வள்ளுவப்பாடி (நாட்டோலை) தேவர்கண்மி மற்றும் பெரியநாவலூர் அழகிய சோமேஸ்வரமுடிய நாயனார் கோவிலின் கணக்காளர்  வறண்ட மற்றும் ஈர நிலங்களை வழங்குவதற்கான ஆணை பதிவாகியுள்ளது.