Posts

Current Affairs

20வது மனாமா பேச்சுவார்த்தை

இது பஹ்ரைன் பேரரசில் 2004 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப் படுகிறது. இந்த பேச்சுவார்த்தை ஆனது மத்தியக் கிழக்கு நாடுகளின் பாதுகாப்பு கட்டமைப்பின் மைய அங்கமாகும். இது புவிசார் அரசியல், பாதுகாப்புப் போக்குகள் மற்றும் மோதல் தீர்வு பற்றிய சில  கொள்கை விவாதங்களை எளிதாக்குகிறது. இந்த ஆண்டிற்கான இந்த நிகழ்வின் கருத்துரு, "Middle East Leadership in Shaping Regional Prosperity and Security" என்பதாகும்.

Current Affairs

20th Manama Dialogue

❖ It is held annually since 2004 in the Kingdom of Bahrain. ❖ The Dialogue is a central element of the Middle East’s security architecture ❖ It facilitates the policy discussions on geopolitics, security trends, and conflict resolution. ❖ Theme of this year’s event is “the Middle East Leadership in Shaping Regional Prosperity and Security”.

Current Affairs

பீமா சகி யோஜனா திட்டம்

பெண்களுக்கு பெரும் அதிகாரம் அளிப்பதற்காகவும் மேலும் அவர்களின் நிதி சார் உள்ளடக்கத்திற்காகவும் மத்திய அரசு இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) ஒரு முன்னெடுப்பாகும். 'பீமா சகி யோஜனா' மூலம், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 70 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ், பெண்களுக்கு நிதி அறிவு மற்றும் காப்பீட்டு விழிப்புணர்வை வழங்கவதற்காக முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு சிறப்புப் பயிற்சி மற்றும் உதவித் தொகை வழங்கப்படும். இந்தப் பயிற்சிக்குப் பிறகு, பெண்கள் LIC முகவர்களாகவும், பட்டதாரிக் காப்பீட்டுச் *சகிகளாகவும் (முகவர்களாகவும்) பணியாற்றலாம். LIC நிறுவனத்தில் மேம்பாட்டு அதிகாரியாகப் பணி புரியும் ஒரு வாய்ப்பும் கிடைக்கப் பெறும்.

Current Affairs

Bima Sakhi Yojana Scheme

❖ The union govt launched this scheme to empower women and further financial inclusion. ❖ This is an initiative of the Life Insurance Corporation of India (LIC). ❖ Through the 'Bima Sakhi Yojana', women in the age group of 18 to 70 years who have passed 10th will be empowered. ❖ Under this scheme, women will be given special training and stipend for the first three years to promote financial literacy and insurance awareness. ❖ After training, women can work as LIC agents and graduate insurance Sakhis. ❖ They will also get an opportunity to work in the role of development officer in LIC.

Current Affairs

2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் GSDP

2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) ஆனது முந்தைய ஆண்டை ஒப்பிடும் போது 14.16% அதிகரித்துள்ளது. இது முதன்மையாகத் தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளால் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது தேசியச் சராசரியை விட சுமார் 56% அதிகமாக இருந்தது. 'மாநில நிதி நிலைமை தமிழ்நாடு அரசு 2022-2023' குறித்த தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் தணிக்கை அறிக்கையில் இந்தத் தரவு வெளியிடப்பட்டுள்ளது. 2021-22 ஆம் ஆண்டில், சுமார் 15.84% ஆக இருந்த GSDP வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் பதிவானது. 2022-23 ஆம் ஆண்டில் நடப்பாண்டு விலையிலான GSDP 23,64,514 கோடி ரூபாயாகவும், 2022-23 ஆம் ஆண்டில் நடப்பாண்டு விலையிலான GDP 2,72,40,712 கோடி ரூபாயாகவும் இருந்தது. மேலும், 2022-23 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் தனிநபர் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 3,08,020 ரூபாயாகவும், நாட்டின் தனிநபர் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 1,96,983 ரூபாயாகவும் இருந்தது. 2018-19 முதல் 2022-23 ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில், வருவாய் வரவுகள் ஆனது 1,73,741 கோடி ரூபாயிலிருந்து 2,43,749 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதோடு, இதன் சராசரி வருடாந்திர வளர்ச்சி விகிதம் 11.13% ஆகும். இந்த காலகட்டத்தில் மூலதன வரவு ஆனது 54,850 கோடி ரூபாயிலிருந்து 1,02,182 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 2018-19 ஆம் ஆண்டில் 13.45% ஆக இருந்த வருவாய் வரவுகளில் மானிய நிதி உதவியின் பங்கு 2022-23 ஆம் ஆண்டில் 15.48% ஆக குறைந்துள்ளது. அந்த ஆண்டு மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டங்களுக்காக (CSS) மாநில அரசு 15,270 கோடி ரூபாயை மத்திய அரசின் பங்காகப் பெற்றது. 2022-23 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சுமார் 393 என்ற நிதிப் பயன்பாட்டு முறைகேடு வழக்குகள் பதிவாகின மற்றும் 30.81 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Current Affairs

Tamil Nadu’s GSDP for 2022-2023

❖ Tamil Nadu’s Gross State Domestic Product (GSDP) for 2022-2023 grew 14.16% when compared to the previous year. ❖ It was driven primarily by the industry and services sectors. ❖ The per capita GSDP of the State was nearly 56% higher than the national average. ❖ This data was released by the CAG’s audit report on ‘the State Finances – the Government of Tamil Nadu 2022-2023’. ❖ During 2021-22, there was a significant boost in GSDP growth, which stood at 15.84%. ❖ The GSDP in 2022-23 at current prices was ₹23,64,514 crore, and the GDP in 2022-23 at current prices was ₹2,72,40,712 crore. ❖ Further, the per capita GSDP of Tamil Nadu for 2022-23 was ₹3,08,020, while that of the country was ₹1,96,983. ❖ From 2018-19 to 2022-23, the revenue receipts grew from ₹1,73,741 crore to ₹2,43,749 crore, with an average annual growth rate of 11.13%. ❖ The Capital receipts increased from ₹54,850 crore to ₹1,02,182 crore during this period. ❖ The share of grants-in-aid in revenue receipts rose marginally from 13.45% in 2018-19 to 15.48% in 2022-23. ❖ The State government received ₹15,270 crore as Central share for the Centrally Sponsored Schemes (CSSs) that year. ❖ There were 393 cases of misappropriation and losses amounting to ₹30.81 crore by the end of 2022-23.

TNPSC Group 1 Exam

Where to Study

TNPSC Group 1 preparation materials are widely available in Tamil and English. Recommended books:     Samacheer Kalvi textbooks for general studies.     Arihant's General Knowledge for concise revision. Coaching institutes like Shankar IAS Academy, We Shine Academy, and online platforms like Unacademy or BYJU'S offer preparation courses.

TNPSC Group 1 Exam

Age Limit

General Category: 21 to 32 years SC/ST/MBC/BC: 21 to 37 years For certain posts like Deputy Superintendent of Police, a minimum age limit of 21 years and a maximum of 30 years (General) and 35 years (SC/ST/MBC/BC) applies.

TNPSC Group 1 Exam

Educational Qualification

Candidates must have a Bachelor’s degree from a recognized university or institution. Final-year students awaiting results can also apply, provided they produce proof of qualification at the time of certificate verification.

Current Affairs

உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு திட்டம்

கூட்டுறவுத் துறையில் உலகின் மிகவும் பெரியதான தானியச் சேமிப்புத் திட்டத்தின் சோதனைக் கட்டத்தின் கீழ், இந்தியா முழுவதும் 11 மாநிலங்களில் உள்ள முதன்மை வேளாண்மைக் கடன் சங்கங்களில் (PACS) வெற்றிகரமாகச் சேமிப்புக் கிடங்குகள் கட்டமைக்கப் பட்டுள்ளன.  இதில் மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், அசாம், தெலுங்கானா, திரிபுரா மற்றும் இராஜஸ்தான் ஆகியவை அடங்கும்.