Posts

Current Affairs

Exercise KHAAN QUEST 2024

❖ The Indian Army contingent participated in the Multinational Military Exercise 'Khaan Quest' 2024 at Ulaanbaatar, Mongolia.  ❖ The exercise first started as a bilateral event between the USA and the Mongolian Armed Forces in 2003. ❖ From 2006 onwards, it evolved into a multinational peacekeeping exercise, with this year marking the 21st iteration.

Current Affairs

India’s Nuclear Power Capacity 2031-32

❖ The present installed nuclear power capacity is set to increase from 8180 MW to 22480 MW by 2031-32. ❖ Atomic Energy has been more than a 70 percent surge in India’s nuclear power capacity in the last 10 years.  ❖ It was increasing from 4,780 MW in 2013-14 to 8,180 MW at present. ❖ The annual electricity generation from nuclear power plants has also increased from 34,228 million units in 2013-14 to 47,971 million units in 2023-24

Current Affairs

UNAIDS உலகளாவிய எய்ட்ஸ் பாதிப்பு குறித்த தகவல் புதுப்பிப்பு 2024

இன்று வரை 42.3 மில்லியன் உயிர்களைப் பலி வாங்கியுள்ள எச்.ஐ.வி தொற்றானது ஒருபெரிய உலகளாவியப் பொது சுகாதாரப் பிரச்சினையாக உள்ளது. 2023 ஆம் ஆண்டின் இறுதியில் 39.9 மில்லியன் மக்கள் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்ற நிலையில் அவர்களில் 65% பேர் உலக சுகாதார அமைப்பின் ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் வாழ்கின்றனர். 2023 ஆம் ஆண்டில், எச்.ஐ.வி தொடர்பான காரணங்களால் 6,30,000 பேர் உயிரிழந்து உள்ளனர் மற்றும் 1.3 மில்லியன் மக்கள் எச்.ஐ.வி தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2025 ஆம் ஆண்டில், எச்.ஐ.வி தொற்றுடன் வாழும் அனைத்து மக்களில் 95% பேர் நோய் கண்டறிதலுக்கான வாய்ப்பினைப் பெற்றிருக்க வேண்டும் என்பதோடு, அவர்களில் 95% பேர் உயிர் காக்கும் எச்.ஐ.வி எதிர்ப்பு மருந்து சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும், மேலும் சிகிச்சையில் எச்.ஐ.வி தொற்றுடன் வாழும் 95% பேர் வைரஸ் எண்ணிக்கையினை குறைக்கும் சிகிச்சையினைப் பெற்றிருக்க வேண்டும். 2023 ஆம் ஆண்டில், இந்த சதவீதங்கள் முறையே 86%, 89% மற்றும் 93% ஆக இருந்தது. 2023 ஆம் ஆண்டில், எச்.ஐ.வி தொற்றுடன் வாழும் அனைத்து மக்களில், 86% பேர் தங்கள் நோய்ப் பாதிப்பு நிலை குறித்து அறிந்திருந்தனர், 77% பேர் எச்.ஐ.வி எதிர்ப்பு மருந்து சிகிச்சையைப் பெற்றனர் மற்றும் 72% பேர் வைரஸ் எண்ணிக்கையினைக் குறைக்கும் சிகிச்சையினைப் பெற்றுள்ளனர். 2023 ஆம் ஆண்டில் எச்.ஐ.வி. நோய்த் தொற்று கொண்ட 1.3 மில்லியன் மக்கள் 2010 ஆம் ஆண்டில் இருந்த அளவை விட 39% குறைவாக உள்ளனர். இருப்பினும், 1.3 மில்லியன் புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் ஆனது 2025 ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப் பட்ட 370,000 அல்லது குறைவான புதிய நோய்த்தொற்றுகள் என்ற இலக்கினை விட மூன்று மடங்கு அதிகமாகும். உலகளவில் எச்.ஐ.வி. எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான செலவினமானது, 9.5 பில்லியன் டாலர் குறைவாக உள்ளது என்பதோடு இந்த இடைவெளி தொடர்ந்து அதிகரித்தும் வருகிறது.

Current Affairs

நிதி ஆயோக் அமைப்பின் 9வது ஆளுகைக் குழுக் கூட்டம்

நிதி ஆயோக் அமைப்பின் 9வது ஆளுகைக் குழு கூட்டத்திற்குப் பிரதமர் அவர்கள் தலைமை தாங்கினார். 26 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றன ஆனால் 10 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் இந்தக் கூட்டத்தில் பங்கு பெற வில்லை. இந்த மாநாட்டின் போது, ஐந்து முக்கியப் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாடுகள் குறித்த பரிந்துரைகள் வழங்கப்பட்டன. அவை 0 குடிநீர்: அணுகல், அளவு மற்றும் தரம்; மின்சாரம்: தரம், செயல்திறன் மற்றும் நம்பகத் தன்மை; சுகாதாரம்: அணுகல், மலிவான விலை, மற்றும் மருத்துவ நலச் சேவையின் தரம்; பள்ளிக் கல்வி: அணுகல் மற்றும் தரம் மற்றும் பள்ளிகளுக்கான நிலம் மற்றும் சொத்து: அணுகல், எண்ணிமமயமாக்கல், பதிவு மற்றும் உரிம மாற்றம்.

Current Affairs

“ஒரே சுகாதாரம்" குழு - தமிழ்நாடு

தலைமைச் செயலாளரைத் தலைவராகக் கொண்ட ஒரே சுகாதாரம் மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான உத்திசார் குழுவை' மாநில அரசு அமைத்துள்ளது. 23 பேர் கொண்ட இந்தக் குழுவானது, பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பொது சுகாதாரச் சவால்களுக்கு விரிவான பல எதிர் நடவடிக்கைகள் மேற்கொள்வதனை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதுசௌமியா சுவாமிநாதன், G.சுந்தர்ராஜன், கல்பனா பாலகிருஷ்ணன் மற்றும் WASH நிபுணர் அனன்யா கோஷல் உள்ளிட்ட நிபுணர்கள் பலர் இக்குழுவில் இடம் பெற்று உள்ளனர். நிலப் பயன்பாடு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களுடன் கூடிய பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் ஆனது, மனிதர்களையும் விலங்குகளையும் பாதிக்கும் பல்வேறு நோய்களின் தோற்றத்திற்கு வழி வகுக்கும்

Current Affairs

UNAIDS Global AIDS Update 2024

❖ HIV remains a major global public health issue, having claimed an estimated 42.3 million lives to date. ❖ There were an estimated 39.9 million people living with HIV at the end of 2023, 65% of whom are in the WHO African Region. ❖ In 2023, an estimated 630 000 people died from HIV-related causes and an estimated 1.3 million people acquired HIV. ❖ By 2025, 95% of all people living with HIV should have a diagnosis, 95% of whom should be taking lifesaving antiretroviral treatment, and 95% of people living with HIV on treatment should achieve a suppressed viral load. ❖ In 2023, these percentages were 86%, 89%, and 93% respectively. ❖ In 2023, of all people living with HIV, 86% knew their status, 77% were receiving antiretroviral therapy and 72% had suppressed viral loads. ❖ The 1.3 million people who acquired HIV in 2023 was 39% lower than in 2010. ❖ However, 1.3 million new cases of HIV are three times higher than the 2025 target of 370,000 or fewer new infections . ❖ The HIV response globally is short of $9.5 billion, and this gap keeps increasing.

Current Affairs

9th Governing Council Meeting of NITI Aayog

❖ Prime Minister chaired the 9th Governing Council Meeting of NITI Aayog. ❖ 26 States and UTs participated in the meeting while 10 states and UTs were absent. ❖ During the conference, recommendations were made on five key themes — o Drinking water: access, quantity, and quality; o Electricity: quality, efficiency, and reliability; o Health: accessibility, affordability, and quality of care; o Schooling: access and quality and land and o Property: accessibility, digitization, registration, and mutation.

Current Affairs

One Health panel - Tamilnadu

❖ The State has constituted the ‘One Health and Climate Change Strategic Committee’ with the Chief Secretary as the Chairperson. ❖ The 23-member committee aims to promote a comprehensive response to the public health challenges posed by climate change. ❖ Experts included are Soumya Swaminathan, G. Sundar Rajan, Kalpana Bala Krishnan and WASH specialist Ananya Ghoshal. ❖ The effects of climate change, combined with land use and lifestyle changes, may lead to the emergence of various diseases affecting both humans and animals.

Current Affairs

சதுப்புநிலச் சுற்றுச்சூழல் அமைப்புகளின் வளங்காப்பிற்கான சர்வதேச தினம் - ஜூலை 26

இது ஒரு தனித்துவமான, சிறப்பு மற்றும் எளிதில் பாதிக்கப்படக் கூடிய சுற்றுச்சூழல் அமைப்பாக நிலவும் சதுப்புநிலச் சுற்றுச்சூழல் அமைப்புகளின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது சதுப்புநிலத்தின் மீதான நிலையான மேலாண்மை, வளங்காப்பு மற்றும் பல்வேறு பயன்பாடுகளுக்கான தீர்வுகளையும் ஊக்குவிக்கிறது. இது ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால் (யுனெஸ்கோ) 2015 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் 1987 ஆம் ஆண்டில் 4,046 சதுர கிலோ மீட்டராக இருந்த சதுப்புநிலங்களின் பரவல் ஆனது 2019 ஆம் ஆண்டில் 4,992 சதுர கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது.2006 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், சுமார் 3.69 மில்லியன் ஹெக்டேராக இருந்த இயற்கையான கடலோர ஈரநிலங்களின் பரவல் ஆனது சுமார் 3.62 மில்லியன் ஹெக்டேராக குறைந்துள்ளது. ஓதங்களுக்கு இடைப்பட்ட சேற்றுப் பரப்பு ஆனது 116,897 ஹெக்டேர் ஆகவும், உவர்நீர் சதுப்பு நிலங்கள் 5,647 ஹெக்டேர் ஆகவும் குறைந்துள்ளது.

Current Affairs

Ecozen - ஆசியாவின் முதலாவது குறைந்த கார்பன் உமிழ்வு கொண்ட பசுமை துத்த நாகம் தயாரிப்பு

+ இந்துஸ்தான் சிங்க் நிறுவனமானது குறைந்த கார்பன் உமிழ்வு கொண்ட EcoZen எனப்படும் ஆசியாவின் முதல் பசுமை துத்தநாக தயாரிப்பு நிறுவனத்தினை அறிமுகப் படுத்தியுள்ளது. இந்துஸ்தான் சிங்க் நிறுவனமானது ஒருங்கிணைந்த துத்தநாக உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தி நிறுவனமாகும். இந்நிறுவனம் ஆனது புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தி இதனை உற்பத்திசெய்கிறது. EcoZen நிறுவனத்தின் கார்பன் உமிழ்வானது உலக சராசரியை விட சுமார் 75 சதவீதம் குறைவாக உள்ளது. EcoZen ஒவ்வொரு டன் துத்தநாகத்திற்கும் என்று ஒரு டன்னுக்கும் குறைவான கார்பன் உமிழ்வினையே வெளியிடுகிறது. ஒரு டன் எஃகு உருக்க செயல்முறையில் ஈகோசென் பயன்படுத்துவதால், சுமார் 400 கிலோ கிராம் கார்பன் வெளியேற்றம் தவிர்க்கப்படும்.