Posts

Current Affairs

பருவநிலை மாற்றம் தொடர்பான முதல் சட்டம் - தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் இராமபோசா மிகப்பெரியப் பருவநிலை மாற்றச் சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார். இது பெரிய அளவில் உமிழ்வினை வெளியிடும் அமைப்புகளுக்கு வரம்புகளை நிர்ணயிக்கும் என்பதோடு ஒவ்வொரு சிறுநகரமும் பெருநகரமும் ஒரு மாற்றுத் தொழில் நுட்ப ஏற்புத் திட்டத்தினை வெளியிட வேண்டும் என்றும் நிர்ணயிக்க உள்ளது. தென்னாப்பிரிக்கா நாடானது, பாரிசு பருவநிலை ஒப்பந்தத்தின் கீழான அதன் உமிழ்வு குறைப்பு உறுதிப்பாடுகளை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டு இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.  தென்னாப்பிரிக்காவானது உலகின் மிக அதிக கார்பன் உமிழ்வு மிகுந்த நாடாகவும், அதிகளவுப் பசுமை இல்ல வாயுக்களை உமிழும் முதல் 15 நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது.

Current Affairs

First Climate Change Law - South Africa

❖ The South African President Cyril Ramaphosa has signed into law a broad climate change act. ❖ It will set caps for large emitters and require every town and city to publish an adaptation plan. ❖ It aims to enable South Africa to meet its emissions reduction commitments under the Paris climate agreement.  ❖ South Africa is the world's most carbon-intensive major economy and among the top 15 greenhouse gas emitters.

Current Affairs

ஐக்கியப் பேரரசு இந்தியா புதிய தொழில்நுட்பப் பாதுகாப்பு முன்னெடுப்பு

இந்தியா மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகிய நாடுகள் இணைந்து தொலைத்தொடர்பு பாதுகாப்பை நன்கு உறுதி செய்யும் ஒரு நோக்கில் தொழில்நுட்பப் பாதுகாப்பு முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளன. முக்கியக் கனிமங்கள், குறைக்கடத்திகள், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் (துளிமம்) கணினியியல் மற்றும் சுகாதாரம் சார்ந்த தொழில்நுட்பம் போன்ற முக்கிய துறைகளிலும் இது ஒத்துழைப்பினை மேற்கொள்ள வழி செய்கிறது. இந்த முன்னெடுப்பானது, 2030 ஆம் ஆண்டிற்கான செயல் திட்டத்தில் குறிப்பிடப் பட்டு உள்ள ஒத்துழைப்புச் செயல்பாட்டு நிரலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதோடு, இது முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் அதிக கவனம் செலுத்தும் வகையிலான ஒத்துழைப்பைக் கொண்டு வரும். இது தவிர, இந்திய அரசானது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான வர்த்தக மற்றும் தொழில்நுட்பச் சபையுடன் முக்கிய மற்றும் வளர்ந்து வரும் தொழில் நுட்பம் (iCET) மீதான முன்னெடுப்பினையும் மேற்கொண்டுள்ளது

Current Affairs

UK - India New Technology Security Initiative

❖ India and the UK launched a Technology Security Initiative aimed at ensuring telecommunications security. ❖ It also makes way to collaboration in key areas such as critical minerals, semiconductors, artificial intelligence, quantum computing and health technology. ❖ The initiative builds on the cooperation agenda set out in the roadmap 2030 and will bring into sharper focus collaboration in critical and emerging technologies. ❖ Besides this, India has the initiative on Critical and Emerging Technology (iCET) with the US and the Trade and Technology Council with the European Union.

Current Affairs

Tamil Nadu’s own Stonehenge

❖ An ancient observatory is found at the State’s first astro-archaeological site in Ellanthankarai, Sivagangai.  ❖ The huge burial site dating back to the megalithic period. ❖ This is the first astro-archaeological site in Tamil Nadu that reveals a clear observatory ground. ❖ This would then lead to a highly learned group called Tamil Arivargal who resided in the region. ❖ The earliest mention of these people is in the Tholkaappiyam. ❖ These people were well versed in astronomy. ❖ They would disseminate what they learnt to others and this form of learning was called Ainthiram, is also found in The Tholkaappiyam.

Current Affairs

தமிழ்நாட்டிற்கே உரிய கல்வட்டங்கள்

சிவகங்கையின் எலந்தங்கரையில் உள்ள மாநிலத்தின் முதல் வானியல் சார்- தொல்லியல் தளத்தில் ஒரு பழங்கால ஆய்வுக் கூடம் கண்டறியப்பட்டுள்ளது. இது பெருங்கற்காலத்தினைச் சேர்ந்த மிகப்பெரிய புதைவிடமாகும். இது ஓர் ஆய்வகப் பரப்பு என்பது தெளிவாக புலப்படுவதால், தமிழ்நாட்டின் முதல் வானியல் சார் தொல்லியல் தளம் இதுவே ஆகும். இது பின்னர் இப்பகுதியில் வசித்த தமிழ் அறிவர்கள் என்ற அதிகம் கற்றறிந்த குழு குறித்தச் சான்றினை வழங்குகிறது. இவர்களைப் பற்றிய ஆரம்பக் குறிப்பு தொல்காப்பியத்தில் உள்ளது. இவர்கள் வானவியலில் சிறந்து விளங்கினர்.

Current Affairs

தல்வார் ரகப் போர் கப்பல்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'INS திரிபுட்' எனப்படும் முதல் தல்வார் ரகப் போர்க் கப்பலானது கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வலிமை மிக்க அம்பினைக் குறிக்கும் வகையில் இந்தக் கப்பலுக்கு திரிபுட் என்று பெயரிடப் பட்டுள்ளது. இந்தப் போர்க்கப்பலில் பிரம்மோஸ் ஏவுகணைகள் மற்றும் ஷ்டில்-1 வான்வழிப் பாதுகாப்பு அமைப்பு ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இந்த வரிசையில் தயாரிக்கப்பட உள்ள இரண்டாவது கப்பலான தமால் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் கட்டமைக்கப்படும். * இந்திய அரசானது, 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரஷ்யாவிடம் இருந்து நான்கு போர்க் கப்பல்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டது என்ற நிலையில் அவற்றில் இரண்டு கப்பல்கள் ரஷ்யாவிலும் இரண்டு கப்பல்கள் கோவா கப்பல் கட்டும் தளத்திலும் கட்டமைக்கப் பட உள்ளன.

Current Affairs

KHAAN QUEST 2024 பயிற்சி

இந்திய இராணுவக் குழுவானது மங்கோலியாவின் உலான்பாதரில் 'கான் குவெஸ்ட் 2024' எனப்படும் பன்னாட்டு இராணுவப் பயிற்சியில் பங்கேற்கிறது. இந்தப் பயிற்சியானது முதன்முதலில் 2003 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கும் மங்கோலிய நாட்டின் ஆயுதப் படைகளுக்கும் இடையிலான இருதரப்பு பயிற்சியாகத் தொடங்கியது.2006 ஆம் ஆண்டு முதல், ஒரு பன்னாட்டு அமைதி காப்புப் பயிற்சியாகப் பரிணமித்தது என்பதோடு இந்த ஆண்டின் பயிற்சியானது அதன் 21வது பயிற்சியினைக் குறிக்கிறது.

Current Affairs

இந்தியாவின் அணுசக்தி திறன் 2031-32

தற்போது 8180 மெகாவாட்டாக உள்ள நிறுவப்பட்ட அணுசக்தி திறன் ஆனது, 2031-32 ஆம் ஆண்டிற்குள் 22480 மெகாவாட்டாக அதிகரிக்கும்.கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் அணுசக்தி உற்பத்தி திறனில் அணு ஆற்றல் ஆனது 70 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. 2013-14 ஆம் ஆண்டில் 4,780 மெகாவாட்டாக இருந்த இந்த அளவு ஆனது தற்போது 8,180 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. அணுமின் நிலையங்களில் ஆண்டுதோறும் பதிவாகும் மின் உற்பத்தியானது, 2013-14 ஆம் ஆண்டில் 34,228 மில்லியன் அலகுகளாக இருந்த நிலையில் இது 2023-24 ஆம் ஆண்டில் 47,971 மில்லியன் அலகுகளாக அதிகரித்துள்ளது

Current Affairs

Talwar Class frigate

❖ The first indigenously built Talwar Class frigate, 'INS Triput', was launched by the Goa Shipyard Limited. ❖ The ship has been named Triput, after the mighty arrow. ❖ The frigate is equipped with Brahmos missiles and the Shtil-1 air defense system. ❖ The second ship - Tamal will be delivered by February 2025. ❖ India had contracted four frigates from Russia in October 2016, two of them to be built in Russia and two at the Goa Shipyard.