Posts

Current Affairs

2024 ஆம் ஆண்டிற்கான காவிரி நீரின் பங்கு

இம்மாதத்தில் காவிரி ஆற்றின் தண்ணீர் வரவு 76 ஆயிரம் மில்லியன் கன அடியை (டிஎம்சி அடி) எட்டியுள்ளதால், தமிழ் நாடு இந்த ஆண்டிற்கான பங்கான 177.25 டிஎம்சி அளவு நீரைப் பெறும் நிலையில் உள்ளது. ஆகஸ்ட் 28, 2024 நிலவரப்படி, ஜூன் 1, 2024 முதல் தமிழ்நாடு தோராயமாக 174.7733 டிஎம்சி அடி நீரினைப் பெற்றுள்ளது. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில், பெறப்பட்ட நீரின் அளவுகள் முறையே 2.25 டிஎம்சி அடி மற்றும் 96.54 டிஎம்சி அடி ஆகும்.  1974 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் மாதத்தில் பெறப்பட்ட நீரின் தரவுகளை ஆய்வு செய்தால், 50 ஆண்டு காலத்தின் (1974-2023) சராசரி அளவு சுமார் 62 டிஎம்சி அடி அளவாக இருந்தது.

Current Affairs

Cauvery water annual share 2024

❖ With this month’s Cauvery realisation touching around 76 thousand million cubic feet (tmc ft), Tamil Nadu is on the verge of receiving its annual share of the river water: 177.25 tmc ft. ❖ As of August 28, 2024, the State received approximately 174.7733 tmc ft, since June 1, 2024. ❖ In June and July, the figures of realisation were 2.25 tmc ft and 96.54 tmc ft, respectively. ❖ A perusal of the data of realisation for August since 1974 would reveal that the average figure for the 50-year-long period (1974-2023) was 62 tmc ft.

Current Affairs

தேசிய நல்லாசிரியர் விருது

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 50 கல்வியாளர்களுக்கு 2024ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கி கௌரவிக்க உள்ளார். இந்த விருது மாணவர்களின் வாழ்க்கை மற்றும் இந்தியாவின் பரந்த கல்வி பிரிவில் மிகவும் குறிப்பிடத் தக்க தாக்கத்தை ஏற்படுத்திய கல்வியாளர்களின் குறிப்பிடத் தக்கப் பங்களிப்புகளை அங்கீகரித்து கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது. இந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர்களில் ஒருவராக மதுரையைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஆர்.எஸ். முரளிதரன் தேர்வு செய்யப்பட்டார். குடியாத்தத்தைச் சேர்ந்த ஆர்.கோபிநாதன் என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு நபர் ஆவார்.

Current Affairs

National Teachers’ Award 2024

❖ President Droupadi Murmu will honour 50 educators with the National Teachers Award 2024. ❖ It aims to recognise and celebrate the remarkable contributions of educators who have made significant impacts on their students' lives and the broader educational landscape in India. ❖ R.S. Muralidharan, a private school teacher from Madurai, was selected as one of the recipients for the National Teachers’ Award. ❖ R. Gopinathan from Gudiyatham is the other recipient from Tamil Nadu.

Current Affairs

தேசிய மருத்துவப் பதிவேடு தளம் 2024

சுகாதாரத் துறை அமைச்சகம் சமீபத்தில் தேசிய மருத்துவப் பதிவேடு (NMR) தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்திய மருத்துவப் பதிவேட்டில் (IMR) பதிவு செய்துள்ள அனைத்து வித இள நிலை மருத்துவர்களும் மீண்டும் NMR தளத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்துப் பதிவு செய்த அலோபதி மருத்துவர்களுக்கும் NMR ஒரு விரிவான சிறந்த தரவுத் தளமாக இருக்கும். NMR தளத்தின் தனித்தன்மை என்னவென்றால், இது மருத்துவர்களின் ஆதார் ஐடியுடன் இணைக்கப் பட்டுள்ளதால் இது தனி நபரின் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது. தேசிய மருத்துவக் குழுமத்தின் ஒரு சரிபார்ப்புக்குப் பிறகு, ஒரு தனிப்பட்ட NMR ஐடி வழங்கப் படும்.

Current Affairs

National Medical Register Portal 2024

❖ The Health Ministry recently launched National Medical Register (NMR) Portal. ❖ All MBBS doctors who are already registered on the Indian Medical Register (IMR) must register again on the NMR. ❖ NMR will be a comprehensive dynamic database for all allopathic (MBBS) registered doctors in India. ❖ The uniqueness of NMR is that it is linked with the Aadhaar ID of the doctors, which ensures the individual’s authenticity. ❖ After the NMC verification, a unique NMR ID would be issued

Current Affairs

MRMBS திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகள்

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தின் (எம்ஆர்எம்பிஎஸ்) கீழ் தனியார் மருத்துவமனைகளையும் இணைக்கும் செயல்முறையை சுகாதாரத் துறை தொடங்கியுள்ளது. இத்திட்டம் 2017 வரை அரசு நிறுவனங்களில் மட்டும் பிரசவிக்கும் ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி வழங்கியது. அதன்பிறகு, தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இலவச மருத்துவச் சேவைகளைப் பெறுபவர்களுக்கும் இந்தத் திட்டத்தை நீட்டிக்க அரசு தனது ஒப்புதலை அளித்துள்ளது. 2018 ஆம் ஆண்டில், இது இந்திய அரசாங்கத்தின் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) உடன் இணையாக மேற்கொள்ளப்பட்டது. தற்போதைய வடிவத்தில், இந்தத் திட்டம் ₹18,000 வரை நிதியுதவி அளிக்கிறது, இதில் தலா ₹2,000 மதிப்புள்ள இரண்டு தாய்வழி ஊட்டச்சத்து தொகுப்பு பைகள் அடங்கும்.

Current Affairs

Private hospitals under MRMBS

❖ The Health Department has initiated the process of empanelling private hospitals under Dr. Muthu Lakshmi Reddy Maternity Benefit Scheme (MRMBS). ❖ The scheme provides financial assistance to the poor pregnant women mandated delivery at government institutions till 2017. ❖ Thereafter, the government has approved extension of the scheme to those who availed themselves of free health services at private medical college hospitals. ❖ In 2018, it was co-branded with the government of India’s Pradhan Mantri Matru Vandana Yojana (PMMVY). ❖ In its present form, the scheme extends the financial assistance to the tune of ₹18,000 that included two maternal nutritional kits each worth ₹2,000.

Current Affairs

ஆன்டிஹைப்பர் ஹைட்ரஜன்-4

ஆன்டிஹைபர்ஹைட்ரஜன்-4 ஆனது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிகக் கனமான எதிர் பருப்பொருள் மீநிலை உட்கருவாகும். இதில் 1 ஆன்டிபுரோட்டான், 2 ஆன்டிநியூட்ரான்கள் 1 ஆன்டி-லாம்ப்டா ஹைபரான் உள்ளன. இந்த ஆண்டிஹைபர்ஹைட்ரஜன்-4 ஆனது, லாம்ப்டா எதிர்ப்பு ஹைபரான் மூலம் சூழப்படும் நிலையில் சில சென்டிமீட்டர் தொலைவில் இருக்கும் போது மட்டுமே சிதைகிறது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டிஹைபர்ஹைட்ரஜன்-4 ஆனது, அமெரிக்காவில் உள்ள சார்பு வேக கன அயனி மோதுவிப்பான் (RHIC) மூலம் தயாரிக்கப்பட்டது.  எதிர் துகள் என்பது மற்றொரு துகளின் அதே நிறை மற்றும் வேறு சில பண்புகளுக்கு இணையான ஆனால் எதிர் மதிப்புகளைக் கொண்டுள்ள ஒரு சார்நிலை அணுத் துகள் ஆகும்.

Current Affairs

Antihyper Hydrogen-4

❖ Antihyperhydrogen-4, Heaviest Antimatter Hypernucleus Ever, was discovered recently. ❖ It contains 1 antiproton, 2 antineutrons, 1 anti-Lambda hyperon. ❖ This antihyperhydrogen-4 decays when it is only a few centimetres away when it is trapped by an anti-Lambda hyperon. ❖ The newly discovered antihyperhydrogen-4 was produced at the Relativistic Heavy Ion Collider (RHIC) in the United States. ❖ Antiparticle is a subatomic particle that has the same mass as another particle and equal but opposite values of some other properties.