Posts

Current Affairs

Chess Olympiad 2024

❖ India has won a double gold medal at 45th Chess Olympiad 2024, Hungary. ❖ GMs Gukesh Dommaraju, Arjun Erigaisi, and Praggnanandhaa Rameshbabu all won as the Indian men wrapped up gold. ❖ India trumped Azerbaijan in the final round to claim a first-ever gold medal in the women’s section. ❖ India also retained the Gaprindashvili Trophy, awarded to the team with the best overall performance across the open and women’s sections. ❖ D. Gukesh, Arjun Erigaisi and Divya Deshmukh also won individual gold medals. ❖ The Chess Olympiad is a biennial chess tournament in which teams representing nations of the world compete

Current Affairs

இலங்கையின் புதிய அதிபர் 2024

இலங்கையின் புதிய அதிபராக அனுரகுமாரா திஸாநாயக்கே தேர்வு செய்யப் பட்டு உள்ளார். அந்த நாட்டின் வரலாற்றில் மார்க்சிஸ்ட் தலைவர் அதிபராகப் பதவி ஏற்றது இதுவே  முதன்முறையாகும். அவரது கட்சி முன்னதாக, இலங்கையின் அப்போதைய அதிபர் J.R.ஜெயவர்த்தனே மற்றும் இந்தியாவின் இராஜீவ் காந்தி ஆகியோரால் கையெழுத்திடப்பட்ட 1987 ஆம் ஆண்டின் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தினைக் கடுமையாக எதிர்த்தது.

Current Affairs

New President of Sri Lanka 2024

❖ Sri Lanka has elected Anura Kumara Dissanayake as its new president. ❖ This is marking the first time in the country's history that a Marxist leader has assumed the role. ❖ His party earlier, vehemently opposed the Indo-Lanka accord of 1987 – signed by Sri Lanka's then-president JR Jayewardene and India's Rajiv Gandhi.

Current Affairs

INSPIRE– MANAK திட்டம்

INSPIRE- MANAK திட்டத்தின் 11வது தேசிய அளவிலான கண்காட்சி மற்றும் திட்டப் போட்டியின் (NLEPC) வெற்றியாளர்களுக்கான பாராட்டு விழாவானது புது டெல்லியில் நடைபெற்றது. * இதன் முக்கியத்துவம் ஆனது, போட்டியின் பங்கேற்பாளர்களில் 52% பெண்கள் ஆவர் என்பது இந்த முன்னெடுப்பின் பெரும் பாலின உள்ளடக்கத் தன்மையை குறிப்பிட்டுக் காட்டுகிறது. இது தேசியக் கண்டுபிடிப்பு அறக்கட்டளை (NIF) - இந்தியா அமைப்புடன் இணைந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையினால் (DST) தொடங்கப்பட்ட ஒரு முதன்மைத் திட்டமாகும். இத்திட்டம் ஆனது படைப்பாற்றல் மற்றும் புதுமைகளை ஊக்குவித்து, மாணாக்கர் சமூகத் தேவைகளை நிவர்த்தி செய்து பொறுப்புள்ள குடிமக்கள் மற்றும் பெரும் தலைவர்களாக மாற உதவுகிறது.

Current Affairs

INSPIRE – MANAK Program

❖ The 11th National Level Exhibition and Project Competition (NLEPC) of INSPIRE– MANAK winners were felicitated in New Delhi. ❖ Notably, 52% of the participants were girls, is further underlining the inclusive nature of the initiative. ❖ It is a flagship scheme under the Department of Science and Technology (DST) with the National Innovation Foundation (NIF) – India. ❖ The scheme promotes creativity and innovation, helping students address societal needs and become responsible citizens and leaders.

Current Affairs

வெண்மை புரட்சி 2.0

1970 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஆபரேஷன் ஃப்ளட் என்ற ஒரு நடவடிக்கையானது, வெண்மைப் புரட்சியை ஏற்படுத்தி, இந்தியாவில் பால் பொருள் உற்பத்தித் துறையை மாற்றியமைத்தது. பால் பொருள் உற்பத்திக் கூட்டுறவு சங்கங்கள் ஆனது 2023-24 ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு 660 லட்சம் கிலோ பால் கொள்முதல் செய்துள்ளன. 2028-29 ஆம் ஆண்டிற்குள் இதை ஒரு நாளைக்கு 1,007 லட்சம் கிலோவாக அதிகரிக்க அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது. சுமார் 1.7 லட்சம் பால் கூட்டுறவுச் சங்கங்கள் (DCS) உள்ளன என்ற நிலையில் அவை சுமார் 2 லட்சம் கிராமங்களை (நாட்டின் மொத்தக் கிராமங்களின் எண்ணிக்கையில் 30%) மற்றும் 22% உற்பத்தியாளர் குடும்பங்களை உள்ளடக்கியது. இந்தக் கூட்டுறவுச் சங்கங்கள் ஆனது நாட்டின் பால் உற்பத்தியில் 10% மற்றும் சந்தைப் படுத்தக் கூடிய உபரியில் 16% ஆகியவற்றைக் கொள்முதல் செய்கின்றன. தற்போது குஜராத், கேரளா, சிக்கிம் ஆகிய சில மாநிலங்களிலும், புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்திலும், 70%க்கும் அதிகமான கிராமங்கள் பால் கூட்டுறவு நிறுவனங்களைக் கொண்டுள்ளன. இது உத்தரப் பிரதேசம், உத்தரக்காண்ட் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய சில மாநிலங்களிலும், ஜம்மு & காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்திலும் 10-20% மட்டுமே உள்ளது. மேற்கு வங்காளம், அசாம், ஒடிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் சிறிய மாநிலங்களில் சுமார் 10%க்கும் குறைவான அளவிலே இத்தகைய கிராமங்கள் உள்ளன. தேசிய அளவிலான தனிநபர் பால் பொருள் கிடைக்கும் தன்மையானது ஒரு நாளுக்கு 459 கிராம் ஆகும் என்ற நிலையில் இது உலகளாவியச் சராசரியான ஒரு நாளுக்கு 323 கிராமை விட அதிகமாகும். இந்த அளவானது மகாராஷ்டிராவில் 329 கிராம் முதல் பஞ்சாபில் 1,283 கிராம் வரை என மாறுபடுகிறது. 2022-23 ஆம் ஆண்டில் பால் உற்பத்தி ஆனது 230.58 மில்லியன் டன்களை எட்டியதன் மூலம், உலகின் முன்னணிப் பால் உற்பத்தியாளராக இந்தியா இருந்தது. 1951-52 ஆம் ஆண்டில், இந்தியாவில் வெறும் 17 மில்லியன் டன் மட்டுமே பால் உற்பத்தி செய்யப் பட்டது.

Current Affairs

White Revolution 2.0

❖ The Operation Flood, launched in 1970, has ushered in the White Revolution and transformed the dairy sector in India. ❖ Dairy cooperatives procured 660 lakh kg of milk per day in 2023-24. ❖ The government wants to increase this to 1,007 lakh kg/ day by 2028-29. ❖ There are about 1.7 lakh dairy cooperative societies (DCSs), which cover around 2 lakh villages (30% of the total number of villages in the country), and 22% of producer households. ❖ These cooperative societies procure about 10% of the country’s milk production and 16% of the marketable surplus. ❖ In the states of Gujarat, Kerala, and Sikkim, and the Union Territory of Puducherry, more than 70% of villages are covered by dairy cooperatives. ❖ In the states of Uttar Pradesh, Uttarakhand, and Madhya Pradesh, and the UT of Jammu & Kashmir coverage is only 10-20%. ❖ In West Bengal, Assam, Odisha, Jharkhand, Chhattisgarh, Himachal Pradesh, and the smaller states of the Northeast, less than 10% of villages are covered. ❖ The national per capita availability of milk is 459 grams/ day, which is higher than the global average of 323 g/ day. ❖ This number varies from 329 g in Maharashtra to 1,283 gram in Punjab. ❖ India is the world’s top milk producer, with production having reached 230.58 million tonnes during 2022-23. ❖ In 1951-52, the country produced just 17 million tonnes of milk.

Current Affairs

தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஜான் மார்ஷலின் சிலை

சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், பிரிட்டிஷ் தொல்பொருள் ஆய்வாளர் ஜான் மார்ஷலின் உருவச் சிலையை தமிழக அரசு நிறுவவுள்ளது. 1902 முதல் 1928 ஆம் ஆண்டு வரை இந்தியத் தொல்லியல் துறையின் (ASI) தலைமை இயக்குநராக மார்ஷல் பணியாற்றினார். இந்தக் காலத்தில் சிந்து சமவெளி நாகரிகத்தை உள்ளடக்கிய இரண்டு முக்கிய நகரங்களான ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ ஆகியவை கண்டுபிடிக்கப் பட்டன. 100 ஆண்டுகளுக்கு முன்பு, 1924 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதியன்று, சர் ஜான்மார்ஷல் சிந்து சமவெளி நாகரிகத்தைக் கண்டுபிடித்ததாக அறிவித்தார்.

Current Affairs

Statue of archaeologist John Marshall

❖ The Tamil Nadu government will install a life-size statue of British archaeologist John Marshall to mark 100 years of the discovery of the Indus Valley Civilisation. ❖ Marshall was the director-general of the Archaeological Survey of India (ASI) from 1902 to 1928. ❖ During this time the Harappa and Mohanjodaro, two main cities that comprise the Indus Valley Civilisation, were discovered. ❖ 100 years ago, on 20th September 1924, Sir John Marshall had announced the discovery of the Indus Valley Civilisation.

Current Affairs

முதல்வரின் புத்தாய்வு மாணவர் திட்டம் 2024

முதல்வரின் புத்தாய்வு மாணவர் திட்டம் என்ற திட்டத்தின் கீழ் 50 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்க மாநில அரசு 50 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்தத் திட்டம் அவர்களின் பிஎச்.டி.க்கான ஆராய்ச்சிக்கு துணைபுரியும். Ph.D (முனைவர்) பட்டம் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் மட்டுமே இந்தப் பயனைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.  இதற்கு எவ்வித வருமான வரம்பும் இல்லை என்பதோடு மேலும் விண்ணப்பதாரர்கள் நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ Ph.D பயில்பவர்களாக இருக்க வேண்டும்.