Posts

Current Affairs

அமைதிக்கான நோபல் பரிசு 2024

ஜப்பானிய அமைப்பான நிஹோன் ஹிடான்கிவிற்கு அணு ஆயுதங்கள் இல்லாத உலகத்தை அடைவதற்கான பெரு முயற்சிகளுக்காக வேண்டி 2024 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டு வீச்சுகளில் இருந்து தப்பியவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. 1956 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட நிஹான் ஹிடாங்கியோ ஜப்பானில் அணு குண்டுகளில் இருந்து தப்பியவர்களின் மிகப்பெரிய மற்றும் மிகவும் செல்வாக்கு மிக்க அமைப்பாகும். கடந்த ஆண்டு, 2023 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு ஆனது, தற்போது சிறையில் இருக்கும் ஈரானிய ஆர்வலர் நர்கீஸ் முகமதிக்கு வழங்கப்பட்டது.

Current Affairs

2024 Nobel Peace Prize

❖ Japanese organisation Nihon Hidankyo has been awarded the Nobel Peace Prize 2024 for its efforts to achieve a world free of nuclear weapons. ❖ It was representing survivors of the atomic bombings of Hiroshima and Nagasaki. ❖ Formed in 1956, Nihon Hidankyo is the largest and most influential organisation of atomic bomb survivors in Japan. ❖ Last year, the 2023 Nobel Peace Prize was awarded to Iranian activist Narges Mohammadi, who is currently imprisoned.

Current Affairs

ரஃபேல் நடால் ஓய்வு

ஸ்பெயின் நாட்டினைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ரஃபேல் நடால் 22 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தையும், 14 பிரெஞ்ச் ஓபன் பட்டங்களையும் வென்று சாதனை படைத்துள்ளார். 2005 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை 17 ஆண்டுகளாக ATP-இன் முதல் 10 இடங்களில் ஐந்து முறை ஆண்டு இறுதியில் உலகின் முன்னணி இடத்தில் இருந்தவர் என்ற பெருமையினைக் கொண்டுள்ளார். டென்னிஸ் போட்டிகளில் அவரது அதிகபட்ச சாதனை ஆண்டுகளில், அவர் 209 வாரங்கள் உலகின் தலைசிறந்த வீரராகத் திகழ்ந்தார். அவர் 2004 முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது ஒரு பட்டத்தையாவது வென்றுள்ளார்.

Current Affairs

Rafael Nadal Retirement

❖ Spain’s tennis player Rafael Nadal has announced his retirement from the professional tennis. ❖ Nadal has won 22-grand slam singles title and a record 14 French Open titles. ❖ A five-time year-end world number one, he remained in the ATP top 10 for an incredible 17 years, from 2005 until March 2024. ❖ During his peak years, he spent 209 weeks ranked as the world’s top player. ❖ He won at least one title every year from 2004 to 2022.

Current Affairs

இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2024

2024 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசானது தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது அவரது வரலாற்று அதிர்ச்சி நிகழ்வுகளை எதிர்கொள்ளும் வகையிலான மற்றும் மனித வாழ்க்கையின் பலவீனத்தை வெளிப்படுத்தும் வகையிலான உணர்ச்சி மிக்க கவிதை வழி உரைநடைக்காக வழங்கப்பட்டுள்ளது. அவரது மற்றொரு குறிப்பிடத்தக்க படைப்பான "Human Acts" (2014) இலக்கியத்திற்கான அவரது அணுகுமுறையை எடுத்துரைக்கிறது. இந்தப் புதினம் என்பது 1980 ஆம் ஆண்டின் குவாங்ஜு எழுச்சியின் மீதான உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. ஹானின் சிறுகதையான "Europa (2012) மேலும் அவரது இலக்கியத் திறனை வெளிப் படுத்துகிறது. அவரது "The Vegetarian" (2007) புத்தகமானது 2016 ஆம் ஆண்டில் மேன் புக்கர் சர்வதேசப் பரிசை வென்றது. 1901 முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஆனது 116 முறை 120 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Current Affairs

Nobel Prize 2024 in Literature

❖ The 2024 Nobel Prize has been awarded for the Literature to South Korean author Han Kang. ❖ It is recognizing her "intense poetic prose that confronts historical traumas and exposes the fragility of human life." ❖ Her another most notable works, "Human Acts" (2014), exemplifies her approach to literature. ❖ The novel is rooted in the real-life Gwangju Uprising of 1980. ❖ Han's short story "Europa" (2012) further showcases her literary prowess. ❖ Her "The Vegetarian" (2007) won the Man Booker International Prize in 2016. ❖ The Nobel Prize in Literature has been awarded 116 times to 120 Nobel Prize laureates between 1901 and 2023.

Current Affairs

தேசியக் கடல்சார் பாரம்பரியங்களுக்கான வளாக மேம்பாடு

குஜராத்தில் உள்ள லோத்தல் நகரில் தேசியக் கடல்சார் பாரம்பரியங்கள் வளாகத்தினை (NMHC) உருவாக்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. இந்தத் திட்டத்தின் 18 மற்றும் 2 ஆம் கட்டங்களுக்கு அமைச்சரவை கொள்கை சார் ஒப்புதலையும் வழங்கியுள்ளது. NMHC அருங்காட்சியகத்தின் 1A கட்டமானது ஆறு காட்சியகங்களைக் கொண்டு இருக்கும் என்பதோடு இதில் இந்தியாவின் மிகப்பெரியதாக அமைய உள்ள இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையின் காட்சியகமும் இடம் பெற்றிருக்கும். NMHC அருங்காட்சியகத்தின் 18 கட்டம் ஆனது மேலும் எட்டு காட்சியகங்களையும் உலகின் மிகவும் உயரமானதாக அமையக் கூடிய வகையிலான கலங்கரை விளக்க அருங்காட்சியகத்தினையும் கொண்டிருக்கும்.

Current Affairs

National Maritime Heritage Complex Development

❖ The Union Cabinet approved the development of the National Maritime Heritage Complex (NMHC) at Lothal in Gujarat. ❖ The Cabinet has also accorded in-principal approval for Phases 1B and 2 of the projects. ❖ Phase 1A will have the NMHC museum with six galleries, including an Indian Navy and Coast Guard gallery envisaged to be one of the largest in the country. ❖ Phase 1B will see NMHC museum getting eight more galleries, and the Light House Museum which is planned to be world’s tallest.

Current Affairs

ஹரியானா மற்றும் ஜம்மு & காஷ்மீர் தேர்தல்

ஜம்மு & காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி (NC) மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. * 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஓர் ஒன்றியப் பிரதேசமாகவும், 370வது சரத்து நீக்கப்பட்ட பிறகும் நடைபெறும் முதல் சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். ஹரியானாவில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைத்து வரலாறு படைத்துள்ளது. அங்கு பாஜக 48 இடங்களிலும், காங்கிரஸ் 37 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஜம்மு & காஷ்மீரின் 90 இடங்களில், NC கட்சி மற்றும் காங்கிரஸ் 49 இடங்களிலும், பா.ஜ.க 29 இடங்களிலும், மக்கள் ஜனநாயக கட்சி (PDP) 3 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளன.

Current Affairs

Haryana and Jammu & Kashmir elections

❖ The alliance of the National Conference (NC) and Congress has won the Jammu and Kashmir assembly polls. ❖ This is the first assembly elections since 2014, first as a Union Territory and first after the removal of Article 370. ❖ In Haryana, the BJP has created history by retaining the state for the record consecutive third term. ❖ The BJP has won 48 seats while the Congress has secured 37. ❖ In J&K's 90 seats, the NC and Congress have won in 49, the BJP in 29 and the PDP in three.