Posts

Current Affairs

CubeSat Standard

❖ The Bureau of Indian Standards (BIS) has adopted the global standard for the CubeSat—a class of small satellites. ❖ The CubeSat standard, originally developed for the Stanford University’s OPAL mission, has gained international acclaim. ❖ They mandate uniform dimensions, low-outgassing materials, kill switches and rigorous testing (vibration, thermal, shock). ❖ The Indian satellite communication market was valued at $1.6 billion in 2022. ❖ It is projected to grow at a compound annual growth rate (CAGR) of 11.75% from 2023 to 2030. ❖ India’s space economy stands at $8 billion, contributing around 2-3% of the global space economy. ❖ The government expects it to reach $100 billion by 2040.

Current Affairs

‘One Nation One Ration Card’ scheme in Tamilnadu

❖ Tamil Nadu has not been given any allocation of foodgrains under the ‘One Nation One Ration Card’ (ONOR) scheme. ❖ Normally, 5% of foodgrains in excess of the State’s allocation is set apart for such cardholders. ❖ 13.816 tonnes of foodgrains - 13.263 tonnes of rice and 0.553 tonnes of wheat - were allocated to the State during 2023-24. ❖ Around 22.8 tonnes of wheat and 0.036 tonnes of rice were distributed in the State under the inter-State portability arrangement in the first six months of the current financial year. ❖ The State draws an average 65,000 tonnes of rice every month. ❖ As for wheat, the Centre provides approximately 8,575 tonnes a month. In addition, the State also procures another 8,500 tonnes every month from the National Co-operative Consumer’s Federation (NCCF) under the Open Market Sales Scheme.

Current Affairs

தமிழ்நாட்டில் 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' திட்டம்

'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' (ONOR) என்ற திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு உணவு தானியங்கள் ஒதுக்கீடு எதுவும் வழங்கப்படவில்லை. பொதுவாக அத்தகைய அட்டைதாரர்களுக்கு, மாநில அரசினால் வழங்கப் படுகின்ற ஒதுக்கீட்டை விட அதிகமாக 5% உணவு தானியங்கள் ஒதுக்கப்படும். 2023-24 ஆம் ஆண்டில் 13.816 டன் உணவு தானியங்கள் 13.263 டன் அரிசி மற்றும் 0.553 டன் கோதுமை மாநிலத்திற்காக ஒதுக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், மாநிலங்களுக்கு இடையே ஒரே அட்டைகளைப் பயன்படுத்துதல் வசதியின் கீழ் மாநிலத்தில் சுமார் 22.8 டன் கோதுமை மற்றும் 0.036 டன் அரிசி விநியோகிக்கப்பட்டுள்ளது. தமிழக மாநிலம் ஆனது ஒவ்வொரு மாதமும் சராசரியாக சுமார் 65,000 டன் அரிசியைப் பெறுகிறது. கோதுமையைப் பொறுத்தவரையில், மத்திய அசரானது ஒரு மாதத்திற்கு சுமார் 8,575 டன்களை வழங்குகிறது. கூடுதலாக, வெளிச்சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் தேசியக் கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பிலிருந்து (NCCF) ஒவ்வொரு மாதமும் மேலும் 8,500 டன் அரிசியை மாநில அரசு கொள்முதல் செய்கிறது.

Current Affairs

Arjun Vajpai

❖ Arjun Vajpai has scaled the Mt. Shishapangma (located in Tibet) and completing his 8th successful summit of a peak over 8,000 meters. ❖ This marks him as the first Indian to scale the mountain. ❖ This also includes the record for the fastest ascent from Base Camp to the summit and back in under 72 hours. ❖ He is the youngest person to climb Mt. Everest (2010) and Mt. Lhotse (2011). ❖ He has now summited 8 of the 14 tallest mountains on Earth. ❖ He is the First Indian to climb eight 8,000-meter peaks.

Current Affairs

அர்ஜுன் வாஜ்பாய்

அர்ஜுன் வாஜ்பாய், சுமார் 8,000 மீட்டர் உயரமுள்ள சிகரங்களில் 8வதாக ஷிஷாபங்மா மலையில் (திபெத்தில் உள்ளது) ஏறி சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். இந்த மலையில் ஏறிய முதல் இந்தியர் என்ற பெருமையை இது குறிக்கிறது. மலை அடிவார முகாமில் இருந்து 72 மணி நேரத்திற்குள் மலை உச்சியினை வேகமாக அடைந்த சாதனையும் இதில் அடங்கும். எவரெஸ்ட் (2010) மற்றும் லோட்சே (2011) ஆகிய சிகரத்தில் ஏறிய இளம் நபர் என்ற ஒரு பெருமையினையும் இவர் கொண்டுள்ளார். அவர் தற்போது பூமியில் உள்ள 14 உயரமான மலைகளில் 8 மலைகளின் உச்சியை அடைந்துள்ளார். 8,000 மீட்டர் உயரம் கொண்ட எட்டு சிகரங்களில் ஏறிய முதல் இந்தியர் என்ற ஒரு பெருமையினையும் இவர் கொண்டுள்ளார். 

Current Affairs

உலகளாவிய ஈடுபாடு திட்டம்

கலாச்சார அமைச்சகம் ஆனது, "உலகளாவிய ஈடுபாடு திட்டத்தினை" செயல்படுத்தி வருகிறது. இந்தியாவின் மிக வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தினை மேம்படுத்துவதையும், உலகளாவிய அரங்கில் இந்தியாவின் மதிப்பினை ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.  இத்திட்டத்தின் கீழ், மக்கள் தொடர்பு மற்றும் இருதரப்பு கலாச்சாரத் தொடர்புகளை மேம்படுத்துவதற்காக வேண்டி வெளிநாடுகளில் "இந்தியத் திருவிழா - Festival of India (Fol)" ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2013-14 முதல் 2023-24 ஆம் ஆண்டு வரையில் பல்வேறு நாடுகளில் மொத்தம் 62 Fol நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

Current Affairs

Me·Gong Festival 2024

❖ The Me·Gong Festival 2024, themed “Echoes of Tradition”, was celebrated the rich heritage and customs of the Garo people. ❖ Garo Hills is a mountainous region in Meghalaya. ❖ It is known for its rich cultural heritage. ❖ The area is home to the Garo tribe. ❖ The two-day event was held at Baljek Airport, Jengjal, West Garo Hills.

Current Affairs

Sabal-20 தளவாடப் பயன்பாட்டிற்கான ஆளில்லா விமானம்

இந்திய இராணுவம் ஆனது, கிழக்குப் படைப் பிரிவில் பயன்படுத்துவதற்காக EndureAir நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்ட Sabal-20 எனப்படும் தளவாடப் பயன்பாட்டிற்கான ஆளில்லா விமானங்களைப் பெற்றுள்ளது. Sabal-20 என்பது பாய்வு வீச்சினைத் தகவமைக்கும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ஆன ஒரு மின்சார ஆளில்லா ஹெலிகாப்டர் ஆகும் என்பதோடு இது 20 கிலோ எடை உள்ளப் பொருட்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது. இது மிகவும் நீண்ட தூரத்திற்கான விநியோக நடவடிக்கைகள், அதிக உயரத்திலான நடவடிக்கைகள் மற்றும் துல்லியமான தளவாட வழங்கீடு போன்ற பல பணிகளுக்கு உதவும்.

Current Affairs

Sabal-20 Logistics Drone

❖ The Indian Army has received Sabal 20 logistics drones procured from EndureAir Systems for deployment in the Eastern sector. ❖ Sabal 20 is an electric unmanned helicopter based on variable pitch technology, and capable of carrying payloads of up to 20 kg. ❖ It will support missions such as long-range deliveries, high-altitude operations, and precision logistics.

Current Affairs

மாஞ்சோலை குறித்த உயர் நீதிமன்ற தீர்ப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (BBTCL) நிறுவனம் வழங்கும் தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தினை (VRS) எதிர்த்து தாக்கல் செய்யப் பட்ட மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வேலைவாய்ப்பு இழப்பால் பாதிக்கப்பட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க ஒப்புக் கொண்ட அனைத்து நிவாரணங்களையும் தமிழக அரசு நீட்டிக்க வேண்டும் என்றும் அது அறிவுறுத்தியுள்ளது. 1928 ஆம் ஆண்டில் சிங்கம்பட்டி ஜமீன்தார் வழங்கிய 99 ஆண்டு காலக் குத்தகை முடிவதற்கு முன்பே ஒட்டு மொத்தமாக மாஞ்சோலைத் தோட்டங்கள் என அழைக்கப் படும் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து மற்றும் குதிரைவெட்டி ஆகிய இடங்களில் BBTCL நிறுவனம் தனது செயல்பாடுகளை முடிவிற்குக் கொண்டுவர முடிவு செய்தது. அந்தப் பகுதியின் ஜமீன்தார் 3,388.78 ஹெக்டேர் பரப்பிலான நிலத்தினைத் தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கியிருந்தார். ஆனால் 1882 ஆம் ஆண்டு அப்போதைய மதராஸ் வனச்சட்டத்தின் 26 மற்றும் 32 ஆகிய பிரிவுகளின் கீழ் 1937 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதியன்று சிங்கம்பட்டி தோட்டம் முழுவதையும் காடுகள் என்று அரசாங்கம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, 1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 02 ஆம் தேதியன்று, அப்போதைய வனப் பறவைகள் மற்றும் விலங்குகள் (பாதுகாப்பு) சட்டம், 1912 என்ற சட்டத்தின் கீழ் அந்தத் தோட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த பகுதி என்பது முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டது. இது நாட்டின் முதல் அறிவிக்கப்பட்ட புலிகள் சரணாலயமாக மாறியது. 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதியன்று, 1972 ஆம் ஆண்டு வனவிலங்குகள் (பாதுகாப்பு) சட்டத்தினைச் செயல்படுத்துவதன் மூலம் தோட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளடங்கியிருந்த பகுதிகளை முக்கியப் புலி வாழ்விடமாக அரசாங்கம் அறிவித்தது.