Posts

Current Affairs

Ozone-Depleting Substance 2024

❖ For the first time a notable decline in the atmospheric levels of potent ozonedepleting substances (ODS), called hydrochlorofluorocarbons (HCFCs) ❖ These HCFCs are also potent greenhouse gases, so a reduction should also lessen global warming. ❖ The Montreal Protocol was agreed to internationally in 1987 to introduce controls on the production and usage of ODS. ❖ The global phase out of the production of CFCs was completed in 2010.

Current Affairs

பூமியின் உள் கருவத்தின் சுழற்சியின் வேகத்தில் தொய்வு

சமீபத்திய ஆய்வுகள், 2010 ஆம் ஆண்டு முதல் பூமியின் மேற்பரப்புடன் ஒப்பிடச் செய்கையில், அதன் உள் கருவத்தின் சுழற்சியின் வேகம் குறையத் தொடங்கியதாக குறிப்பிடுகின்றன. உட்கருவத்தின் வேகம் குறைவதால் பூமியில் ஒரு நாளின் நேர அளவானது ஒரு நொடி என்ற அளவின் வீதத்தில் மாறக்கூடும். பூமியின் உள் கருவமானது, இரும்பு மற்றும் நிக்கல் ஆகியவற்றால் ஆன, திரவ வெளிப்புற கருவத்திற்குள் (உருகிய உலோகங்களால் ஆனது) காணப்படும், ஈர்ப்பு விசையால் அதன் இடத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ஒரு திடமான கோளமாகும்.

Current Affairs

கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு அர்மேனியா

அர்மேனியா நாட்டுப் பிரதமர், அந்த நாட்டு அரசானது கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பிலிருந்து (CSTO) வெளியேற உள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். CSTO என்பது தாக்குதல் ஏற்பட்டால் தங்களுக்குள் ஒன்றையொன்றுப் பாதுகாப்பதாக உறுதியளித்துள்ள முன்னாள் சோவியத் நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட, ரஷ்யாவின் தலைமையிலான கூட்டணியாகும். ரஷ்ய நாட்டு அரசானது, நாகோர்னோ-கரபாக் விவகாரத்தில் தலையிட மறுத்ததால் ரஷ்யாவுடனான அர்மேனியாவின் உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளன. * அர்மேனியா நாடானது, ரஷ்ய நாட்டின் அதிபருக்கு பிடியாணை பிறப்பித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பிப்ரவரி மாதத்தில் இணைந்தது. இந்த CSTO அமைப்பானது 2002 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த அரசுகளுக்கு இடையேயான இராணுவக் கூட்டணி (ஆறு நாடுகள்) ஆகும்.

Current Affairs

செயற்கைத் தீவுகள் - தமிழ்நாடு

புதுக்கோட்டை மாவட்டத்தின் மிகப்பெரிய பாசனக் குளங்களில் ஒன்றான கவிநாடு கண்மாயில் செயற்கைத் தீவுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பாசனக் குளத்தில் 10 செயற்கைத் தீவுகள் உருவாக்கப்படும் முன் அவற்றில் படிந்துள்ள வண்டல் படிவுகள் அகற்றப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் மனிதர்களால் உருவாக்கப்பட உள்ள தீவுகளில், பறவைகளை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்படும் செயற்கை மேடுகளின் மேல் பல்வேறு பழம் தரும் மரங்கள் மற்றும் உள்ளூர் மர இனங்களின் நாற்றுகள் நடப்பட உள்ளன. தமிழ்நாடு பசுமை பருவநிலை நிறுவனத்தின் தொழில்நுட்ப வழிகாட்டுதலுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Current Affairs

Earth’s Inner Core – Slow Down

❖ The recent studies revealed that, the Earth’s inner core began to slow down its rotation since 2010, compared to the planet's surface. ❖ The slowing down could change the length of one day on the Earth by fractions of a second. ❖ The Earth's inner core, a solid sphere made of iron and nickel, is suspended within the liquid outer core (made of molten metals) and anchored in its place by gravity.

Current Affairs

Collective Security Treaty Organization - Armenia

❖ Armenia's Prime Minister has confirmed that his country would pull out of the Collective Security Treaty Organization (CSTO). ❖ The CSTO is a Russia-dominated alliance of former Soviet states that have pledged to protect one another in the event of an attack. ❖ Armenia's ties with Russia have become strained since Moscow refused to intervene in Nagorno-Karabakh. ❖ In February, Armenia joined the International Criminal Court (ICC) which has issued an arrest warrant for Russian President. ❖ CSTO is an intergovernmental military alliance (six countries) that came into effect in 2002.

Current Affairs

Artificial islands - Tamilnadu

❖ The Work of forming artificial islands at Kavinadu Kanmoi, one of the biggest irrigation tanks in Pudukkottai district, has been started. ❖ The silt would be removed before the formation of 10 artificial islands in the irrigation tank. ❖ The plan was to plant seedlings of various fruit-bearing trees and local species atop the artificial mounds which would be created on man-made islands to attract birds. ❖ The project was being implemented with technical guidance from the Tamil Nadu Green Climate Company

Current Affairs

NDCகள் பற்றிய UNEP அறிக்கை 2024

ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பானது (UNEP), "இலட்சிய இலக்குகளை மேம்படுத்துதல், நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல்: காடுகளுக்கான மேம்படுத்தப்பட்ட தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்டப் பங்களிப்புகளை நோக்கி" என்றதொரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. தற்போதைய தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்டப் பங்களிப்புகளில் (NDCs) வழங்கப் படும் வனப் பாதுகாப்பில் காணப்படும் பல குறிப்பிடத்தக்க இடைவெளிகளை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. 2019-2023 ஆம் ஆண்டு வரை, முன்னணி 20 நாடுகளில் வெப்பமண்டல காடழிப்பு மூலம் ஆண்டுதோறும் சுமார் 5.6 பில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றப் படுகிறது. 8 நாடுகளில் மட்டுமே அளவு வரம்பு கணக்கிடப்படக் கூடிய காடழிப்பு இலக்குகளைக் கொண்டுள்ளன என்ற நிலையில் மேலும் UNFCCC கட்டமைப்பின் பங்குதார நாடுகளில் வெறும் 38% நாடுகள் மட்டுமே வன அழிப்பு நடவடிக்கைக் குறைப்பு நடவடிக்கைகளை உள்ளடக்கியுள்ளன. வேளாண்மை மற்றும் பலவீனமான நிலப் பயன்பாட்டுக் கொள்கைகள் இதில் முக்கிய காடழிப்பு காரணிகளாக உள்ளன.

Current Affairs

கருங்காய்ச்சல் (VL) வழிகாட்டல் கட்டமைப்பு

உலக சுகாதார அமைப்பானது (WHO) கிழக்கு ஆப்பிரிக்காவில் கருங்காய்ச்சல் நோயை ஒழிப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும் புதிய கருங்காய்ச்சல் (உள்ளுறுப்பு லீஷ்மேனியாசிஸ்) கட்டமைப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது. 2030 ஆம் ஆண்டிற்குள் கிழக்கு ஆப்பிரிக்காவின் துணைப் பிராந்தியத்தில் VL பாதிப்பு எண்ணிக்கைகளை 90 சதவிகிதம் குறைத்து, ஆண்டிற்கு சுமார் 1,500க்கும் குறைவான எண்ணிக்கையாக குறைப்பது என்பது இதன் இலக்குகளில் அடங்கும். இந்தி மொழியில் காலா-அசார் என்று அழைக்கப்படுகிற இது பாதிக்கப்பட்ட பெண் மணல் ஈக்கள் கடிப்பதால் பரவுகிறது மற்றும் 80 நாடுகளில் இதன் தொற்று பரவுகிறது. * 2022 ஆம் ஆண்டில், உலகளாவிய VL பாதிப்புகளில் 73 சதவீதப் பாதிப்புகள் கிழக்கு ஆப்பிரிக்காவில் பதிவானது என்ற நிலையில் இதில் 50 சதவீதமானது 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் ஏற்பட்டது. * முன்னதாக, 2004 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் ஏற்பட்ட உலகளாவியப் பாதிப்புகளில் வங்காளதேசம், இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் 70 சதவீதப் பங்கினை கூட்டாகக் கொண்டிருந்தன. 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், வங்காளதேசம் VL நோயினை வெற்றிகரமாக ஒழித்து விட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்ததையடுத்து அந்த நாடு இந்த சாதனையினை எட்டிய உலகின் முதல் நாடு என்ற பெருமையினை அடைந்தது.

Current Affairs

இந்தியாவில் உள்ள கிராமப்புற அரசாங்கம் குறித்த விமர்சனம்

உலக வங்கிக் குழுமமானது இருநூற்று ஐம்பதாயிரம் மக்களாட்சி அமைப்புகள்: இந்தியாவில் உள்ள கிராமப்புற அரசாங்கங்கள் குறித்த ஓர் ஆய்வு என்ற ஒரு தலைப்பிலான கொள்கை ஆராய்ச்சி அறிக்கைத் தாளினை வெளியிட்டுள்ளது. 1992 ஆம் ஆண்டில், இந்திய அரசியலமைப்பின் 73வது சட்டத் திருத்தம் ஆனது 800 மில்லியன் குடிமக்களை உள்ளடக்கிய 250,000 கிராமப்புற மக்களாட்சி அமைப்புகளை (கிராமப் பஞ்சாயத்துகள் என அழைக்கப்படும்) உருவாக்கியது. பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் மாநில மற்றும் தேசிய அரசாங்கங்களால் வழங்கப் படும் மானியங்களை மட்டுமே முழுவதுமாக சார்ந்துள்ளன. சராசரியாக, ஒரு கிராமப் பஞ்சாயத்துக்கு 0.67 பஞ்சாயத்து செயலாளர்கள் மட்டுமே உள்ளனர் என்ற நிலையில் உத்தரப் பிரதேசம் போன்ற சில மாநிலங்களில் இந்த எண்ணிக்கை 0.33 ஆகக் குறைந்துள்ளது. 1992 ஆம் ஆண்டு 73வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் ஆனது பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கி, ஒரே மாதிரியான அமைப்பு, தேர்தல்கள், இட ஒதுக்கீடு ஆகியவற்றை நிறுவியது.