Posts

Current Affairs

மிகவும் சக்திவாய்ந்த அணு சக்தி சாராத வெடிகுண்டு SEBEX 2

இந்தியக் கடற்படையானது தனது வழக்கமான TNT (ட்ரைநைட்ரோடொலுவீன்) என்ற வெடிகுண்டினை விட இரண்டு மடங்கு அதிகமான ஆபத்தான புதிய வெடிபொருளைவெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.  SEBEX 2 என்ற இந்தப் புதிய வெடிபொருளை நாக்பூரைச் சேர்ந்த சோலார் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இது தற்போது மிகவும் சக்திவாய்ந்த அணுசக்தி சாராத வெடிபொருட்களில் ஒன்று ஆகும். SEBEX 2 என்பது தற்போது கிடைக்கக்கூடிய எந்தவொரு திடமான வெடிபொருளையும் விட மிகவும் சக்திவாய்ந்த வெடிப்பு விளைவை கொண்ட ஒரு புதிய வெடி மருந்து உருவாக்கம் ஆகும். இந்தியக் கடற்படையானது EEL நிறுவனத்தின் SITBEX 1 என்ற வெடி மருந்தினை முதல் தெர்மோபரிக் (தீப்பற்றுதலினால் வெளிப்புறத்திலிருந்து ஆக்சிஜனை உள்ளிழுத்து மாபெரும் தீப்பிழம்பினை உருவாக்கும்) வெடிமருந்து என சான்றளித்துள்ளது. கடுமையான வெப்பத்துடன் கூடிய மிகவும் நீண்ட நேர வெடிப்பு விளைவினை உருவாக்குகின்ற SITBEX 1 ஆனது எதிரி நாட்டுப் படை வீரர்களின் பதுங்கு குழிகள், சுரங்கங்கள் மற்றும் பிற கவசமிடப்பட்ட இடங்களைக் குறி வைத்து தாக்க ஏற்றது.

Current Affairs

RIMPAC கடற்படைப் பயிற்சி

ஹவாயில் நடைபெற்ற உலகின் மிகப்பெரிய கடற்படை இராணுவப் போர்பயிற்சியான பசிபிக் பெருங்கடலின் விளிம்பில் உள்ள நாடுகளின் பெரும் பயிற்சியில் (RIMPAC) இந்தியக் கடற்படை இணைந்துள்ளது. 29 நாடுகள், 40 மேற்பரப்பு தளக் கப்பல்கள், மூன்று நீர்மூழ்கிக் கப்பல்கள், 150க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் சுமார் 25,000க்கும் மேற்பட்ட வீரர்கள் இப்பயிற்சியில் பங்கேற்கின்றனர். இந்தியக் கடற்படையானது RIMPAC பயிற்சிக்காக INS ஷிவாலிக் எனப்படும் முன்னணி போர்க்கப்பலினை ஈடுபடுத்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டு RIMPAC பயிற்சியின் கருத்துரு, "Partners: Integrated and Prepared" என்பது ஆகும்.

Current Affairs

மத்திய இரயில்வே நிர்வாகத்தின் மிதக்கும் சூரியசக்தி உற்பத்தி ஆலை

மத்திய இரயில்வே (CR) நிர்வாகமானது மகாராஷ்டிராவின் இகத்புரி ஏரியில் மிதக்கும்இரயில்வே நிர்வாம் மேற்கொள்ளும் முதல் வகையான முன்னெடுப்பாகும். இந்த முன்னெடுப்பானது மின்சாரத்தை உற்பத்தி செய்வது மட்டுமின்றி பெருமளவில் தண்ணீரையும் சேமிக்கும். இகத்புரியில் உள்ள இரயில்வே நிர்வாக நீர்த்தேக்கம் ஆனது 2.8 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் 1,206 மில்லியன் லிட்டர் தண்ணீரை சேமிக்கும் திறன் கொண்டது. இந்த மிதக்கும் சூரியசக்தி உற்பத்தி ஆலை ஆனது 10 மெகாவாட் திறன் கொண்டதாக இருக்கும்.

Current Affairs

RIMPAC naval exercise

The Indian Navy has joined the world's largest naval military wargame Rim of the Pacific Exercise (RIMPAC) in Hawaii. ❖ Twenty-nine nations, 40 surface ships, three submarines, over 150 aircraft and more than 25,000 personnel are participating the exercise.  ❖ The Indian Navy has deployed frontline warship INS Shivalik for the RIMPAC. ❖ The theme of RIMPAC 2024 is "Partners: Integrated and Prepared".

Current Affairs

செயற்கை நுண்ணறிவு கற்பித்தல் உதவியாளர் - வித்யா

கும்பகோணத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கணினி அறிவியல் ஆசிரியர் ஈஸ்வரி ஜெயராமன் "வித்யா" என்ற செயற்கை நுண்ணறிவு கற்பித்தல் உதவியாளரினை வடிவமைத்துள்ளார். இது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயக்கப்படும் ஒரு கல்வி கற்பிக்கும் எந்திரமனிதன் ஆகும். இது எதிர்காலத்தில் வரும் ஆண்டுகளில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான வகுப்பறை அனுபவத்தினை மாற்றியமைக்கும். கும்பகோணத்தில் உள்ள தேசிய வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் இது அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.

Current Affairs

Central Railway’s Floating Solar Plant

❖ The Central Railway (CR) is set to install floating solar panels on Igatpuri Lake in Maharashtra, a first for Indian Railways. ❖ This initiative will not only generate power but also conserve water.  ❖ The railway reservoir at Igatpuri has a capacity to store 1,206 million litres of water over a surface area of 2.8 lakh square meters. ❖ The floating solar plant will boast a capacity of 10 MWp.

Current Affairs

AI teaching assistant - Vidya

❖ Retired computer science teacher Eswari Jayaraman, 63, based in Kumbakonam, has designed “Vidya”. ❖ It is an educational robot powered by artificial intelligence (AI).  ❖ It will transform the classroom experience for teachers and students in the coming years. ❖ It is unveiled at the National Vidyalaya Senior Secondary School in Kumbakonam

Current Affairs

ஸ்ரீசைலம் புலிகள் வளங்காப்பகத்தில் இந்தியக் காட்டெருது

ஆந்திரப் பிரதேசத்தின் நந்தியால் மாவட்டத்தில் உள்ள நல்லமலை வனப்பகுதியின் அத்மகூர் பகுதியில் இந்தியக் காட்டெருது (போஸ் கௌரஸ்) கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் காட்டில் முன்னொரு காலத்தில் இந்தியக் காட்டெருது (தெலுங்கு மொழியில் அடவி துன்னா) காணப்பட்டது என்பதோடு இது விசித்திரமாக நீண்ட காலமாக அந்தப் பகுதியில் தென்படாமல் இருந்தது. இந்தியக் காட்டெருது ஆனது கடைசியாக 1870 ஆம் ஆண்டுகளில் இங்கு கண்டறியப் பட்டது எனவே இது 150 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தென்பட்டுள்ளது. இந்தியக் காட்டெருது என்றும் அழைக்கப்படும் கௌர், தெற்காசியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட மிகப் பெரிய மாடு இனமாகும். நாகார்ஜுனசாகர்-ஸ்ரீசைலம் புலிகள் வளங்காப்பகமானது இந்தியாவின் மிகப்பெரிய புலிகள் வளங்காப்பகமாகும்.

Current Affairs

24வது SCO உச்சி மாநாடு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 2024 ஆம் ஆண்டு உச்சி மாநாடு கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் நடைபெற்றது.இந்த மாநாட்டில் அஸ்தானா பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதோடு மேலும், ஆற்றல், பாதுகாப்பு, வர்த்தகம், நிதி மற்றும் தகவல் பாதுகாப்பு தொடர்பான 25 உத்தி சார் ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 10வது உறுப்பினர் நாடாக பெலாரஸ் இடம் பெற்றுள்ளது. ஷாங்காய் 5 அமைப்பானது 1996 ஆம் ஆண்டில் 5 உறுப்பினர்களுடன் உருவானது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பானது 2001 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதியன்று ஷாங்காய் நகரில் நிறுவப் பட்டதோடு, உஸ்பெகிஸ்தானை அந்த அமைப்பின் ஆறாவது உறுப்பினராக இணைத்தது. ஆப்கானிஸ்தான் மற்றும் மங்கோலியா ஆகியவை பார்வையாளர் நாடுகள் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளன.

Current Affairs

கங்கை நீர் ஒப்பந்தம் குறித்த மறுபேச்சுவார்த்தை

இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகியவை இணைந்து 1996 ஆம் ஆண்டில் கங்கை நீர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம் ஆனது முதன்மையாக கங்கை நதி நீரினை நியாயமான முறையில் பகிர்ந்து கொள்வது குறித்த பல்வேறு விதிமுறைகளில் கவனம் செலுத்துகிறது என்ற னியாளியில் இது 2026 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட வேண்டும். தீவிர வானிலை, மாறிவரும் மழைப் பொழிவுப் போக்குகள் மற்றும் பனிப்பாறைகள் உருகுவதால் நதி நீர் இருப்பு மாறுகிறது. இந்த ஒப்பந்தம் குறித்த மறுபேச்சுவார்த்தையில் இது ஒரு முக்கியப் பிரச்சினையாக விவாதிக்கப்பட உள்ளது.