Posts

Current Affairs

SDG இந்தியா குறியீடு 2023-2024

நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்ட சமீபத்திய 2023-2024 ஆம் ஆண்டு இந்திய அளவிலான SDG (நிலையான மேம்பாட்டு இலக்குகள்) பூர்த்திக் குறியீட்டில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. 2018 ஆம் ஆண்டில் 66 ஆக இருந்த தமிழக மாநிலத்தின் கூட்டு மதிப்பெண்ணானது சமீபத்தியக் குறியீட்டில் 78 ஆக உயர்ந்துள்ளதையடுத்து, இந்தக் குறியீட்டில் தமிழக மாநிலம் மூன்றாவது இடத்தில் உள்ளது. 2023-2024 ஆம் ஆண்டில் மருத்துவமனையில் பிரசவிக்கும் குழந்தைகள் விகிதம் ஆனது 97.18% என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மாநிலத்தின் புவியியல் பகுதியில் சுமார் 25% பகுதிகளைக் காடுகளாக மாற்றியதை அடுத்து தமிழக மாநிலம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளித்து உள்ளது. ஆயுஷ்மான் பாரத்-PMJAY திட்டத்தின் மூலமாக, சுமார் 300 மில்லியனுக்கும் அதிகமான பயனாளிகளுக்கு சுகாதாரக் காப்பீட்டு பலன்களை தமிழ்நாடு வழங்கியுள்ளது. ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ், 11 மில்லியன் கழிப்பறைகள் கட்டுவதற்கு நிதி உதவி வழங்கியுள்ளது.

Current Affairs

MeDevIS Database

❖ WHO launched MeDevIS, an open-access hub providing information on 2301 types of medical devices. ❖ It aims to aid governments, regulators, and users in making informed decisions by offering a unified platform that simplifies the device naming and replaces traditional paper-based searches. ❖ Additionally, it covers 2301 types of medical devices used for various health issues. ❖ These include reproductive health, maternal and child health, diseases like cancer, heart problems, diabetes, and infectious diseases such as COVID-19.

Current Affairs

NIRMAN Portal

❖ The Union Minister for Coal and Mines has launched the NIRMAN Portal, part of Mission Karma yogi. ❖ NIRMAN stands for “Noble Initiative for Rewarding Mains Aspirants of National Civil Services Examination.” ❖ The portal aims to support UPSC Preliminary exam qualifiers from SC, ST, female, or third gender candidates with an annual family income under Rs 8 lakh. ❖ Eligible candidates, permanent residents of Coal India Limited's 39 operational districts, will receive Rs 1 lakh.

Current Affairs

Renewable energy production in Tamilnadu - 2024

❖ The renewable energy generation in the State has crossed the 50% mark with April witnessing the highest - 52%.  ❖ Renewable energy comprises wind, solar, hydro and cogeneration. ❖ The highest energy demand recorded being 20,830 megawatts (MW) on May 2 and highest consumption per day, 454 million units (MUs). ❖ The State electricity utility, had a total renewable energy generation in March, April, May and June at 24,530 Mus. ❖ The total generation of the state is 48,835 MUs, showing an average of 50% of clean energy composition. ❖ The State has, total generation power capacity of 34,700 MW. ❖ The renewable generation capacity was 18,300 MW including hydro power (2,300 MW), wind (8,750 MW), solar (6,550 MW) and cogeneration power (700 MW). ❖ The energy demand in the State breached the 20,500 MW touching 20,700 MW with the city recording 4,380 MW on April 30. ❖ In the same month the highest renewable energy generation of 6,900 MUs out of a total generation of 12,960 MUs was recorded.

Current Affairs

MeDevIS தரவுத் தளம்

உலக சுகாதார அமைப்பானது, 2301 வகையான மருத்துவச் சாதனங்கள் பற்றியத் தகவல்களை வழங்கும் ஒரு தடையற்ற அணுகல் வசதி கொண்ட MeDevIS என்ற தரவுத் தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. சாதனத்தின் பெயரிடலை எளிதாக்குதல் மற்றும் பாரம்பரியக் காகித அடிப்படையில் அமைந்தத் தேடல்களை மாற்றுதல் ஆகியவற்றினை வழங்கும் ஒரு ஒருங்கிணைந்தத் தளத்தை வழங்கச் செய்வதன் மூலம் அரசாங்கங்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் பயனர்களுக்குத் தகவலறிந்த முடிவுகளை எடுப்பதில் உதவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. கூடுதலாக, இது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்குப் பயன்படுத்தப்படும் 2301 வகையான மருத்துவச் சாதனங்களை உள்ளடக்கியது. இனப்பெருக்க ஆரோக்கியம், தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியம், புற்றுநோய், இதயப் பிரச்சனைகள், நீரிழிவு நோய் போன்ற நோய்கள் மற்றும் COVID-19 போன்ற தொற்று நோய்கள் ஆகியவை இதில் அடங்கும்.

Current Affairs

NIRMAN இணையதளம்

மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் அவர்கள் கர்மயோகி திட்டத்தின் ஒரு பகுதியாக NIRMAN இணைய தளத்தினைத் தொடங்கி வைத்தார். NIRMAN என்பது "தேசிய குடிமைப்பணி தேர்வின் முதன்மை தேர்வாளர்களுக்கு வெகுமதி அளிக்கும் ஒரு உன்னத முயற்சி" என்பதாகும். இந்த இணைய தளம் ஆனது, 8 இலட்சம் ரூபாய்க்கும் குறைவான குடும்ப வருமானம் கொண்ட பட்டியலிடப்பட்ட சாதியினர், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் சமூகத்தினைச் சேர்ந்த பெண் அல்லது மூன்றாம் பாலினத்தவர்கள் மத்தியக் குடிமைப் பணித் தேர்வின் முதல்நிலைத் தேர்வில் தகுதிப் பெற்றவர்களுக்கு ஆதரவு அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம் செயல்படும் 39 மாவட்டங்களின் நிரந்தர வசிப்பாளர்களில் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் 1 லட்சம் ரூபாய் பெறுவார்கள்.

Current Affairs

2024 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி

தனது மாநிலத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியானது 50% சதவீதத்தினைதாண்டியுள்ளது என்ற வகையில் இது ஏப்ரல் மாதத்தில் மிகவும் அதிகபட்சமாக 52% ஆக இருந்தது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்பது காற்று, சூரிய ஒளி, நீர் மற்றும் இணை மின்னாக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது. மே 02 ஆம் தேதியன்று 20,830 மெகா வாட் என்ற அதிக எரிசக்தி தேவை பதிவாகி உள்ளது, என்பதோடு மின் நுகர்வானது அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 454 மில்லியன் அலகுகள் (MUs) பதிவாகியுள்ளது. நம் மாநிலத்தின் மின்சார உற்பத்தி அலகுகள் ஆனது, மார்ச், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் 24,530 மில்லியன் அலகுகள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியைக் கொண்டிருந்தன. நம் மாநிலத்தின் மொத்த உற்பத்தி 48,835 மில்லியன் அலகுகள் ஆகும் என்ற நிலையில் இது சராசரியாக 50% தூய்மையான ஆற்றல் கலவையைக் குறிக்கிறது. மாநிலத்தின் மொத்த மின் உற்பத்தி திறன் 34,700 மெகாவாட் ஆகும். நீர் மின்னாற்றல் (2,300 மெகாவாட்), காற்று ஆற்றல் (8,750 மெகாவாட்), சூரிய மின்னாற்றல் (6,550 மெகாவாட்) மற்றும் இணை மின்னாக்கம் (700 மெகாவாட்) உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி திறன் 18,300 மெகாவாட் ஆகும். ஏப்ரல் 30 ஆம் தேதியன்று சென்னையில் 4,380 மெகாவாட் ஆற்றல் தேவை என்பது பதிவானதையடுத்து, நம் மாநிலத்தில் ஆற்றல் தேவை 20,500 மெகாவாட்டைத் தாண்டி 20,700 மெகாவாட்டைத் தொட்டது. அதே மாதத்தில், சுமார் 12,960 மில்லியன் அலகுகள் என்ற மொத்த உற்பத்தியில் அதிக பட்சமாக 6,900 மில்லியன் அலகுகள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி பதிவு செய்யப் பட்டது.

Current Affairs

Unusual Ionospheric Shapes

❖ NASA's GOLD mission discovered surprising X- and C-shaped formations. ❖ These shapes are usually observed during geomagnetic disturbances, appeared even in the absence of such events, confounding experts. ❖ The ionosphere of Earth is a layer of electrically charged gas that is essential for long-distance radio transmission. ❖ GOLD is a satellite that was launched in October 2018 and is orbiting over the Western Hemisphere to measure temperatures and ionospheric densities

Current Affairs

அசாதாரணமான அயனிமண்டல வடிவங்கள்

நாசாவின் GOLD செயற்கைக் கோளானது வியக்கத்தக்க X- மற்றும் C- வடிவ ரீதியிலான வடிவங்களைக் கண்டறிந்துள்ளது. இந்த வடிவங்கள் பொதுவாக புவிக் காந்த இடையூறுகளின் போது ஏற்படுகின்றன என்ற நிலையில் புவிக் காந்த இடையூறுகள் இல்லாத நிலையிலும் கூட இவை தோன்றுவது நிபுணர்களை குழப்பத்தில் ஆழத்தியுள்ளது. பூமியின் அயனி மண்டலம் என்பது நீண்ட தூர அளவிலான ரேடியோ பரிமாற்றத்திற்கு அவசியமான மின்னூட்டம் பெற்ற வாயுவின் அடுக்கு ஆகும்.GOLD என்பது 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் விண்ணில் ஏவப்பட்ட, வெப்ப நிலை மற்றும் அயனி மண்டல அடர்த்தியை அளவிடுவதற்காக என்று மேற்கு அரைக் கோளத்தில் சுற்றி வருகின்ற ஒரு செயற்கைக்கோள் ஆகும்.

Current Affairs

பிட்ச் பிளாக் நடவடிக்கை

இந்திய விமானப்படையின் Su-30 MKI போர் விமானங்கள் ஆனது, ஆஸ்திரேலியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பன்னாட்டு வான்வழிப் போர்ப் பயிற்சியில் பங்கேற்க உள்ளன. இந்த பிட்ச் பிளாக் நடவடிக்கையின் 43 ஆண்டுகால வரலாற்றில் இவ்வாண்டு பயிற்சி எனபது மிகப்பெரியதாக இருக்கும். இப்பயிற்சியில் உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 20 நாடுகளும், பல்வேறு நாடுகளின் 140க்கும் மேற்பட்ட விமானங்களும் பங்கேற்க உள்ளன. இந்தப் பயிற்சி நிறைவடைந்ததும், மலேசியாவின் குவாந்தன் எனுமிடத்தில் நடைபெற உள்ள மலேசிய விமானப் படையின் உதார சக்தி 24 பயிற்சியில் இந்திய விமானப் படை பங்கேற்க உள்ளது.