உலகளாவிய வர்த்தகக் கண்ணோட்டம் மற்றும் புள்ளி விவர அறிக்கை 2024 - WTO
உலக வர்த்தக அமைப்பானது உலக வணிகப் பொருட்களின் வர்த்தக வளர்ச்சியானது 3.3 சதவீதமாக இருக்கும் என்ற அதன் முந்தைய மதிப்பீட்டினை 2025 ஆம் ஆண்டில் 3 சதவீதமாக இருக்கும் என்று குறைத்துக் கணித்து கூறியுள்ளது.
2024 ஆம் ஆண்டில், 2.6 சதவீதமாக கூறப்பட்ட வணிகப் பொருட்களின் வர்த்தக வளர்ச்சிக்கான முன் கணிப்பினை 2.7 சதவீதமாக WTO அமைப்பு உயர்த்தியது.
2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வருடாந்திர 2.3 சதவீத அதிகரிப்பு பதிவாகி உள்ளது. 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய வணிகப் பொருட்களின் வர்த்தகத்தில் ஐரோப்பா தொடர்ந்து அதிக மதிப்பினைக் கொண்டுள்ளது. சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தியா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட பிற ஆசியப் பொருளாதாரங்கள் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.