Published on Sep 18, 2024
Current Affairs
VL-SRSAM எறிகணை 2024
VL-SRSAM எறிகணை 2024
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் இந்தியக் கடற்படை ஆகிய இரண்டும் இணைந்து செங்குத்தாக ஏவக்கூடிய ஒரு குறுகிய தூர வரம்பிலான எறிகணையின் (VL-SRSAM) சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளன.
  • VL-SRSAM என்பது ஒரு விரைவு எதிர்வினையாற்றும் எறிகணையாகும். இது எல்லா திசைகளிலிருந்தும் வரும் அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து தாக்கக்கூடியது.
  • இந்தியக் கடற்படைக்காக இது முதலில் 40 கி.மீ தூரம் உள்ள இலக்குகளைத் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது என்ற நிலைமையில் தற்போது 80 கி.மீ வரையிலான இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மாக் 4.5 என்ற அதிகபட்ச வேகத்துடன், இந்த ஆயுத அமைப்பால் 16 கிமீ உயரத்தை அடைய முடியும்.