Published on Jun 29, 2024
Current Affairs
U-17 ஆசிய மல்யுத்தச் சாம்பியன்ஷிப் போட்டி 2024
U-17 ஆசிய மல்யுத்தச் சாம்பியன்ஷிப் போட்டி 2024
  • ஜோர்டானின் அம்மான் நகரில் நடைபெற்ற 17 வயதிற்குட்பட்டோருக்கான ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா தனது பங்கேற்பினை நிறைவு செய்து உள்ளது.
  • இந்தியாவினைச் சேர்ந்த இளம் வீரர்கள் அணியானது நான்கு தங்கம், இரண்டு வெள்ளி, ஐந்து வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 11 பதக்கங்களை வென்றது. 46 கிலோ எடைப் பிரிவில் திபன்ஷி, 53 கிலோ கிலோ எடைப் பிரிவில் முஸ்கான், 61 கிலோ கிலோ எடைப் பிரிவில் ரஜ்னிதா, 69 கிலோ கிலோ எடைப் பிரிவில் மான்சி லாதர் ஆகியோர் மகளிருக்கான மல்யுத்தப் போட்டியில் நான்கு தங்கப் பதக்கங்களையும் வென்றனர்.
  • ஆடவருக்கான போட்டியில், 55 கிலோ எடைப் பிரிவில் சமர்த் கஜனன் மக்காவே வெள்ளிப் பதக்கம் வென்றார்.