Published on Oct 21, 2024
Current Affairs
SCO உச்சி மாநாடு 2024 - பாகிஸ்தான்
SCO உச்சி மாநாடு 2024 - பாகிஸ்தான்
  • 2024 ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாடு ஆனது இஸ்லாமாபாத் நகரில் நடைபெற்றது. * பிராந்தியப் பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுதல் போன்ற சில முக்கியமானப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை இந்த உச்சி மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் வெளிவிவகாரங்கள் துறை அமைச்சர், சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பெலாரஸ், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் ஈரானின் முதல் துணைத் தலைவர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
  • ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகளில் இந்திய அதிகாரி ஒருவரால் பாகிஸ்தானுக்கு மேற் கொள்ளப்பட்ட முதல் உயர் நிலை அதிகாரியின் பயணம் இதுவாகும். SCO என்பது சீனாவின் ஷாங்காய் நகரில் 2001 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதியன்று நிறுவப்பட்ட அரசுகளுக்கிடையேயான ஒரு நிரந்தர சர்வதேச அமைப்பாகும்.
  • 2017 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்ததுடன் இந்த அமைப்பின் உறுப்பினர் எண்ணிக்கை ஒன்பது ஆக விரிவடைந்தது.