Published on Nov 7, 2024
Current Affairs
RC மோரிஸ் அறிக்கை மற்றும் வரகு அரிசி
RC மோரிஸ் அறிக்கை மற்றும் வரகு அரிசி
  • பந்தவ்கர் புலிகள் வளங்காப்பகத்தில் 72 மணி நேரத்திற்குள் 10 யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்திய போது, மத்தியப் பிரதேச வனத் துறை அதிகாரிகள் RC மோரிஸ் அறிக்கையினைக் கண்டறிந்துள்ளனர்.
  • இது தமிழ்நாட்டின் வண்ணாத்திப்பாறை காப்புக்காட்டில் 14 யானைகள் உயிரிழந்தது பற்றிய விவரங்களைக் கொண்ட 1934 ஆம் ஆண்டு மே 22 என்று தேதியிட்ட சுமார் 90 ஆண்டுகள் பழமையான அறிக்கையாகும். இந்த அறிக்கையில் யானைகளின் உயிரிழப்பிற்கு உள்ளூரில் 'வரகு' என்று அழைக்கப் படும் கோடோ வகை சிறு தானியத்தினை உட்கொண்டதே காரணம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இதற்கான மாற்று மருந்தாக அதிக அளவில் புளி தண்ணீர் அல்லது மோர் வழங்கப் படலாம் என்று நம்பப்படுகிறது.
  • * இந்தச் சம்பவம் ஆனது 1933 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதியன்று நிகழ்ந்தது. அதே வகை சிறு தானியமானது தற்போது மத்தியப் பிரதேசத்தின் பந்தவ்கரில் நடந்த யானைகளின் உயிரிழப்புகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.