Published on Nov 11, 2024
Current Affairs
QS அமைப்பின் ஆசியத் தரவரிசை 2025
QS அமைப்பின் ஆசியத் தரவரிசை 2025
  • இந்த 16வது அறிக்கையில் 25 வெவ்வேறு உயர்கல்வி அமைப்புகளைச் சேர்ந்த 984 பல்கலைக் கழகங்கள் இடம் பெற்றுள்ளன.
  • இதில் 193 இந்திய நிறுவனங்கள் இடம் பெற்றதுடன் சீனா (135) மற்றும் ஜப்பான் (115) ஆகியவற்றினை விஞ்சி இந்தப் பட்டியலில் அதிகப் பிரதிநிதித்துவம் பெற்ற நாடாக இந்தியா விளங்குகிறது.
  • இதில் பீகிங் பல்கலைக் கழகம் ஆனது ஆசிய அளவில் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
  • இதில் அதைத் தொடர்ந்து ஹாங்காங் பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகம் ஆகியவை உள்ளன. இதில் டெல்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (44) ஆனது மும்பையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தினை (48) முந்தி இந்தியாவின் முன்னணி நிறுவனமாக மாறியுள்ளது.
  • * சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது இப்பட்டியலில் 56வது இடத்தினைப் பெற்று இந்தியாவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. முதல் 100 இடங்களில் ஆறு பல்கலைக்கழகங்கள் உட்பட இந்திய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.