Published on Aug 4, 2024
Current Affairs
PM-PRANAM 2024
PM-PRANAM 2024
  • பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது (CCEA), உயிர் உரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் பூமியை நன்கு மீட்டெடுத்து மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட PM-PRANAM திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • PM-PRANAM என்பது பிரதம மந்திரியின் புவி மறுசீரமைப்பு, விழிப்புணர்வு உருவாக்கம், ஊட்டமளிப்பு மற்றும் மேம்படுத்துவதற்கான திட்டம் என்பதைக் குறிக்கிறது. உரங்களை நிலையான மற்றும் சீரான முறையில் பயன்படுத்துவதை ஊக்குவித்தல், மாற்று உரங்களை ஏற்றுக் கொள்வது, கரிம வகை மற்றும் இயற்கை முறையில் வேளாண்மையினை ஊக்குவித்தல் போன்றவற்றின் மூலம் புவியின் ஆரோக்கியத்தை காக்க மாநிலங்கள் / ஒன்றியப் பிரதேசங்களால் தொடங்கப் பட்ட பல முயற்சிகளை நிறைவு செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அனைத்து மாநிலங்களும் / ஒன்றியப் பிரதேசங்களும் PM PRANAM திட்டத்தின் கீழ் அடங்கும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ், முந்தைய 3 ஆண்டுகளின் சராசரி நுகர்வுடன் ஒப்பிடும்போது, இரசாயன உரங்களின் நுகர்வு ஆனது (யூரியா, DAP, NPK, MOP) குறைக்கப் படுவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில் ஒரு மாநிலம் / ஒன்றியப் பிரதேசத்தினால் சேமிக்கப்படும் உர மானியத்தில் சுமார் 50 சதவீமானது மானியமாக அந்த மாநிலம் / ஒன்றியப் பிரதேசத்திற்கு அனுப்பப்படும்.
  • மாநிலங்கள் / ஒன்றியப் பிரதேசங்கள் இந்த மானியத்தை அங்குள்ள விவசாயிகள் உட்பட மாநிலத்தில் உள்ள மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தலாம்.