Published on Sep 28, 2024
Current Affairs
PM-JUGA திட்டம்
PM-JUGA திட்டம்
  •  மத்திய அமைச்சரவையானது, "பிரதான் மந்திரி ஜன்ஜாதிய உன்னத் கிராம் அபியான்" திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்ட ஒருங்கிணைப்பு மூலம் பழங்குடியின சமூகங்களின் சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  •  இது "காடுகளை நன்குப் பராமரிப்பதற்கும் வளங்காப்பதற்கும் வழி வகுப்பதற்காக" அனைத்து வன உரிமைகள் சட்டத்தின் (FRA) கீழும் பட்டா வைத்திருப்பவர்களுக்கும் நிலையான வேளாண் நடைமுறைகளை கொண்டு வருகிறது. 2024 ஆம் ஆண்டு ஜூன் மாத நிலவரப் படி, பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் (ST) மற்றும் பிற ஆதிவாசிக் குழுக்களைச் சேர்ந்த மக்கள் மற்றும் சமூகங்களுக்கு 24 லட்சத்திற்கும் அதிகமான FRA பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.  இது நாடு முழுவதும் 1.9 கோடி ஏக்கர் வன நிலத்தை உள்ளடக்கியது.
  • இருப்பினும், FRA சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட 50.5 லட்சம் கோரிக்கைகளில் 34.83% நிராகரிக்கப்பட்டது மற்றும் 15.9% நிலுவையில் உள்ளது. * PMJUGA திட்டத்தின் கீழ் இலக்காகக் கொண்ட 63,000 பழங்குடியினர் பெரும்பான்மை யாக வாழும் கிராமங்கள் இந்தியா முழுவதும் 549 மாவட்டங்களில் 2,740 தொகுதிகளில் அமைந்துள்ளன.