Published on Sep 16, 2024
Current Affairs
PM E- DRIVE திட்டம்.
PM E- DRIVE திட்டம்.
  • மத்திய அமைச்சரவையானது, "பிரதான் மந்திரி - மின்சாரப் பேருந்து சேவை கட்டணக் காப்பீட்டு செயல்முறை (PSM) திட்டம்" மற்றும் "புத்தாக்கம் மிக்க வாகன மேம்பாட்டில் பிரதான் மந்திரி மின்சார வாகன இயக்கங்களுக்கான புரட்சி (PM E-DRIVE) திட்டத்திற்கு" ஒப்புதல் அளித்துள்ளது.
  • 2024-25 ஆம் நிதியாண்டு முதல் 2028-29 ஆம் நிதியாண்டு வரை 38,000க்கும் மேற்பட்ட மின்சாரப் பேருந்துகளை இயக்கச் செய்வதற்கு தேவையான ஆதரவினை PSM திட்டம் வழங்கும்.
  • PM E-Drive திட்டத்தின் கீழ் மின்சார இரு சக்கர வாகனங்கள், மின்சார மூன்று சக்கர வாகனங்கள், மின்சார அவசர மருத்துவச் சேவை ஊர்திகள், மின்சாரச் சரக்குந்துகள் மற்றும் பிற அதிகரித்து வரும் பல்வேறு மின்சார வாகனங்கள் (EVs) ஆகியவற்றினை வாங்குவதற்கு 3,679 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும்.
  • கனரகத் தொழில்துறை அமைச்சகம் ஆனது, இந்தத் திட்டத்தினைச் செயல்படுத்தி, வாங்குபவர்களுக்கு மானியம் மற்றும் உற்பத்தியாளர் மின்னணுப் பற்றுச் சீட்டுகள் ஆகியவற்றை ஒரு பிரத்தியேக இணைய தளம் மூலம் வழங்கும்.