உயிரித் தொழில்நுட்பத் துறை (DBT) ஆனது, இந்தியாவின் நுண்ணுயிர் திறனின் பயன் மயத்தினை வெளிப்படுத்துவதற்காக 'One Day One Genome ஒரு நாள் ஒரு மரபணு' என்ற முன்னெடுப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு விரிவான விளக்க அறிக்கை, தகவல்களை உள்ளடக்கிய வரைகலைகள் மற்றும் மரபணுத் தரவுகளுடன் கூடிய, இந்தியாவில் இருந்து முழுமையாக விளக்கப்பட்ட பாக்டீரிய மரபணுவினைப் பொது வெளியில் வெளியிடுவதை இது ஒரு நோக்கமாகக் கொண்டு ள்ளது. ஓர் உயிரினத்தின் மரபணு என்பது நியூக்ளியோடைடு என்ற தளங்களால் ஆன டிஎன்ஏ அல்லது ஆர்என்ஏவின் தனித்துவமான வரிசையைக் கொண்டுள்ளது.