Published on Nov 14, 2024
Current Affairs
NAWO-DHAN திட்டம்
NAWO-DHAN திட்டம்
  • கேரளாவின் வேளாண்மைத் துறையானது, புதிய வேளாண் வள வாய்ப்புகள் தோட்டக் கலை வேளாண் வணிக வலையமைப்பினைத் தீவிரப் படுத்துதல் (NAWO- DHAN) திட்டத்தின் கீழ் ஒரு சோதனைத் திட்டத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.
  • NAWO-DHAN திட்டத்திற்காக அக்டோபர் மாதத்தில் வெளியிடப்பட்ட ஈடுபாடு விருப்ப ஆவணத்திற்கு (Eol) சுமார் 22 நில உரிமையாளர்கள் மற்றும் 149 விவசாயிகள் இது வரையில் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
  • இந்தத் திட்டத்தின் கீழ், விவசாயிகளின் குழுக்கள் ஆனது, சேவை நிலை ஒப்பந்தங்கள் மூலம் குறிப்பிட்ட நிலத்தில் எந்தவிதமான உரிமையும் இல்லாமல், 'விவசாயத்தினை ஒரு சேவையாக' கருதி சாகுபடியில் ஈடுபடும். காய்கறிகளில் வருடாந்திர உற்பத்தி-தேவை இடைவெளி ஆனது 13.76 லட்சம் மெட்ரிக் டன்களாகவும், பழங்களில் 14 லட்சம் மெட்ரிக் டன்களாகவும் உள்ளன.