சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) அழிந்து வரும் உயிரினங்களின் செந்நிறப் பட்டியலின் புதுப்பிப்பின் போது முதல் உலகளாவிய மரங்கள் மதிப்பீடு ஆனது வெளியிடப்பட்டது.
இதன் கண்டுபிடிப்புகள் ஆனது உயிரிப் பன்முகத்தன்மை உடன்படிக்கையின் 16வது பங்குதாரர்கள் (COP16) மாநாட்டில் அறிவிக்கப்பட்டன.
உலகில் உள்ள மர இனங்களில் சுமார் 38 சதவீதம் ஆனது தற்போது அழிவை எதிர் நோக்கி வருவதாக இந்த மதிப்பீடு கண்டறிந்துள்ளது.அபாயத்தில் உள்ளன.
உலகின் மிகவும் உயர்ந்த மரங்கள் பன்முகத்தன்மை கொண்ட தென் அமெரிக்காவில், மதிப்பிடப் பட்ட 13,668 இனங்களில் 3,356 மர இனங்கள் ஆபத்தில் உள்ளன.
IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் தற்போது 166,061 இனங்கள் உள்ளன, அவற்றில் 46,337 அழியும் அபாயத்தில் உள்ளன.