Published on Sep 27, 2024
Current Affairs
INSPIRE– MANAK திட்டம்
INSPIRE– MANAK திட்டம்
  • INSPIRE- MANAK திட்டத்தின் 11வது தேசிய அளவிலான கண்காட்சி மற்றும் திட்டப் போட்டியின் (NLEPC) வெற்றியாளர்களுக்கான பாராட்டு விழாவானது புது டெல்லியில் நடைபெற்றது.
  • * இதன் முக்கியத்துவம் ஆனது, போட்டியின் பங்கேற்பாளர்களில் 52% பெண்கள் ஆவர் என்பது இந்த முன்னெடுப்பின் பெரும் பாலின உள்ளடக்கத் தன்மையை குறிப்பிட்டுக் காட்டுகிறது. இது தேசியக் கண்டுபிடிப்பு அறக்கட்டளை (NIF) - இந்தியா அமைப்புடன் இணைந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையினால் (DST) தொடங்கப்பட்ட ஒரு முதன்மைத் திட்டமாகும்.
  • இத்திட்டம் ஆனது படைப்பாற்றல் மற்றும் புதுமைகளை ஊக்குவித்து, மாணாக்கர் சமூகத் தேவைகளை நிவர்த்தி செய்து பொறுப்புள்ள குடிமக்கள் மற்றும் பெரும் தலைவர்களாக மாற உதவுகிறது.