- 2023-24 ஆம் ஆண்டில் நிதியியல் நடவடிக்கைப் பணிக்குழு (FATF) நடத்திய பரஸ்பர மதிப்பீட்டில் இந்தியா சிறப்பான மதிப்பினைப் பெற்றுள்ளது.
- இது இந்தியாவினை 'வழக்கமான கண்காணிப்பு நிலையில் உள்ள நாடுகள்' பிரிவில் வைக்கிறது என்ற நிலையில் நான்கு G20 நாடுகள் மட்டுமே இந்த அந்தஸ்தினைப் பகிர்ந்து கொள்கின்றன.
- இந்தியா ஏற்கனவே FATF வழிகாட்டுதல் குழுவில் உறுப்பினராக உள்ளது.
- நிதியியல் நடவடிக்கைப் பணிக்குழு (FATF) என்பது 1989 ஆம் ஆண்டில் ஒரு சர்வதேச கண்காணிப்பு அமைப்பாக நிறுவப்பட்ட ஓர் அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.
- இது பணமோசடி, பயங்கரவாத நிதியுதவி மற்றும் சர்வதேச நிதி அமைப்பின் நேர்மைக்கு தொடர்புடைய பிற அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதை முக்கியநோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்தியா 2010 ஆம் ஆண்டில் FATF அமைப்பில் உறுப்பினராக மாறியது.