Published on Nov 17, 2024
Current Affairs
COP 29 - சர்வதேச கார்பன் சந்தைத் தரநிலைகள்
COP 29 - சர்வதேச கார்பன் சந்தைத் தரநிலைகள்
  • 29வது பங்குதாரர்கள் மாநாடு (COP29) ஆனது, ஐக்கிய நாடுகள் சபையினால் முன் வைக்கப் பட்ட பாரீஸ் பருவநிலை உடன்படிக்கையின் 6வது பிரிவு தொடர்பான சில கார்பன் சந்தைத் தரநிலைகளை ஒப்புக் கொண்டுள்ளது. 
  • தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்டப் பங்களிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள கார்பன் உமிழ்வு குறைப்பு இலக்குகளை அடைய நாடுகள் தானாக முன்வந்து கார்பன் மதிப்பு வரவுகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இது வரையறுக்கிறது.
  • உமிழ்வுக் குறைப்பு மற்றும் அகற்றுதல்கள் உண்மையானவை, கூடுதலானவை, சரி பார்க்கப் பட்டவை மற்றும் அளவிடக் கூடியவை என்றும் இது பெரும் உத்தரவாதம் அளிக்கிறது. இந்தப் பிரிவு 6 ஆனது, 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பாரீஸ் எனும் உடன்படிக்கையில் முன்மொழியப்பட்டது.
  • * இது சந்தை அடிப்படையிலான நெறிமுறையின் மூலம் தேசிய உமிழ்வுக் குறைப்பு இலக்குகளை அடைய நாடுகளுக்கு உதவும் ஒரு சர்வதேசக் கட்டமைப்பாகும்.
  • இந்த நெறிமுறையில் தனியார் துறையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த சட்டப் பிரிவின் 6.2, 6.4 மற்றும் 6.8 ஆகிய முக்கிய உட்பிரிவுகள் ஆனது சந்தை சாராத அணுகுமுறைகளை உள்ளடக்கியது.