Posts

Current Affairs

Apollo 11 Anniversary 2024

❖ USA celebrated 55th anniversary of Apollo 11 moon landing at Space Center at Houston. ❖ Humanity had reached the Moon on July 20, 1969. ❖ Astronaut Neil Armstrong made history as he stepped down the ladder and onto the lunar surface, followed by astronaut Buzz Aldrin. ❖ The two spent the next few hours collecting samples and planted an American flag on the Moon's surface

Current Affairs

New Pension Scheme ‘VATSALYA

❖ The finance minister introduced a new type of pension scheme for minors where parents can contribute to their children's future retirement. ❖ The new pension scheme for minors is called the NPS Vatsalya. ❖ This regular contribution can made by parents or guardians. ❖ The scheme will get converted to regular NPS once the child attains the age of 18. ❖ The National Pension Scheme (NPS) is a voluntary pension system for all citizens, including both residents and NRIs between the ages of 18 and 70 years

Current Affairs

அப்பல்லோ 11 ஆண்டு நிறைவு விழா 2024

ஹூஸ்டன் விண்வெளி மையத்தில் அப்பல்லோ 11 நிலவில் தரையிறங்கியதன் 55வது ஆண்டு விழாவை அமெரிக்கா கொண்டாடியது. மனிதகுலம் ஆனது 1969 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதியன்று நிலவினை அடைந்தது.விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் விண்கலனில் இருந்து கீழே இறங்கி நிலவின்மேற்பரப்பில் கால் பதித்து வரலாறு படைத்தார் என்ற நிலையில் அவரைத் தொடர்ந்து விண்வெளி வீரர் புஷ் ஆல்டெரின் நிலவில் கால் பதித்தார். இருவரும் அடுத்த சில மணி நேரங்களில் நிலவில் மாதிரிகளைச் சேகரித்து, நிலவின் மேற்பரப்பில் அமெரிக்கக் கொடியை நட்டனர்.

Current Affairs

புதிய ஓய்வூதியத் திட்டம் 'VATSALYA

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்கால ஓய்வூதியத்திற்குப் பங்களிக்கும் வகையில், சிறார்களுக்கான ஒரு புதிய வகை ஓய்வூதியத் திட்டத்தினை நிதியமைச்சர் அறிமுகப்படுத்தினார். சிறார்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம் ஆனது NPS வத்சல்யா என அனுசரிக்கப் படுகிறது. இந்த வழக்கமான ஓய்வூதியத் திட்டத்தில் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் தங்கள் பங்களிப்பினை மேற்கொள்ளலாம். குழந்தை 18 வயதை அடைந்தவுடன் இந்தத் திட்டம் வழக்கமான NPS திட்டமாக மாற்றப் படும். தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) என்பது 18 முதல் 70 வயதிற்குட்பட்டக் குடிமக்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் உட்பட அனைத்துக் குடிமக்களுக்குமான ஒரு தன்னார்வ ஓய்வூதிய அமைப்பாகும்.

Current Affairs

Tamilnadu State Minorities Commission 2024

❖ The Tamil Nadu government reconstituted the State Minorities Commission with Rev. Fr. Joe Arun as its Chairperson. ❖ The State government also posted M.M. Abdul Kuthoos alias Iraianban Kuthoos as its Vice Chairperson. ❖ It also named Hamilton Welson, A. Sornaraj, Nagore A.H. Nazimuddin, Praveen Kumar Thatiya, Rajendra Prasad, Rameet Kapoor, J. Mohammed Rafi and S. Vasanth as its members. ❖ The State government also named C. Fernandas Rathina Raja as the chair of the Tamil Nadu Minorities Economic Development Corporation.

Current Affairs

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் 2024

தமிழ்நாடு மாநில அரசானது அருட்தந்தை ஜோ அருண் என்பவரைத் தமிழக மாநிலச் சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக நியமித்து அந்த ஆணையத்தினை மறுசீரமைத்துள்ளது. தமிழக மாநில அரசானது M.M. அப்துல் குத்தூஸ் என்ற இறையன்பன் குத்தூஸ் என்பவரை அதன் துணைத் தலைவராக நியமித்துள்ளது. ஹாமில்டன் வெல்சன், A. சொர்ணராஜ், நாகூர் A.H. நஜிமுதீன், பிரவீன் குமார் தத்தியாராஜேந்திர பிரசாத், ரமீத் கபூர், J. முகமது ரஃபி மற்றும் S.வசந்த் ஆகியோரையும் அதன் உறுப்பினர்களாக நியமித்துள்ளது. தமிழக மாநில அரசானது, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக C.பெர்னாண்டாஸ் ரத்தின ராஜாவினை நியமித்துள்ளது.

Current Affairs

உலகளாவிய வனப் பகுதியில் பதிவாகியுள்ள உயர்வு

உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மூலம் வெளியிடப்பட்ட இந்த அறிக்கைக்கு 'உலக வன அறிக்கை 2024' எனப் பெயரிடப் பட்டுள்ளது. அதிகபட்சமாக 19,37,000 ஹெக்டேர் காடுகளின் பரப்பளவைக் கொண்டு சீனாவானதுஇதில் உலகளவில் முன்னணியில் உள்ளது. அதைத் தொடர்ந்து 4,46,000 ஹெக்டேர் பரப்பளவுடன் ஆஸ்திரேலியாவும், அதனை அடுத்து இந்தியாவும் இதில் இடம் பெற்றுள்ளன. இந்தியா, 2010 முதல் 2020 வரை ஆண்டுதோறும் 2,66,000 ஹெக்டேர் காடுகளின் பரப்பு உயர்வினைப் பெற்றுள்ளது. இந்த காலக் கட்டத்தில் மிக அதிக வனப் பரப்பளவைக் கொண்ட முதல் 10 நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. சிலி, வியட்நாம், துருக்கி, அமெரிக்கா, பிரான்சு, இத்தாலி மற்றும் ருமேனியா ஆகியவை முதல் 10 இடங்களில் உள்ள மற்ற நாடுகளில் அடங்கும். 2000 முதல் 2010 வரையில் மற்றும் 2010 முதல் 2020 வரையிலான காலக் கட்டங்களில் மொத்த உலகளாவியச் சதுப்புநில இழப்பு விகிதம் 23% குறைந்துள்ளதாகவும் இந்த அறிக்கை கூறியுள்ளது.

Current Affairs

2024 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், தொடர்ந்து ஏழாவது முறையாக 2024-25 ஆம் நிதியாண்டின் நிதிநிலை அறிக்கையினை ஜூலை 23 ஆம் தேதியன்று தாக்கல் செய்தார். இதனால், முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை அவர் முறியடித்து உள்ளார். கடன்கள் தவிர்த்து மொத்த வரவுகள் மற்றும் மொத்தச் செலவினங்கள் முறையே 32.07 லட்சம் கோடி ரூபாய் மற்றும் 48.21 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. நிகர வரி வரவுகள் 25.83 லட்சம் கோடி ரூபாயாகவும், நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.9% ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அரசாங்கம் அடுத்த ஆண்டு நிதிப் பற்றாக்குறையை 4.5 சதவீதத்திற்கும் கீழ் எட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளது. 2024-25 ஆம் நிதியாண்டில் தேதியிடப்பட்ட பத்திரங்கள் மூலம் மொத்த மற்றும் நிகரச் சந்தைக் கடன்கள் முறையே 14.01 லட்சம் கோடி ரூபாய் மற்றும் 11.63 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவர் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் மூன்று புதிய ஊழியர்கள் சார்ந்த ஊக்கத் திட்டங்களை அறிவித்துள்ளார். எந்தவொரு அரசாங்கத் திட்டங்களிலிருந்தும் இது வரை பயனடையாத மாணவர்கள் உள்நாட்டுக் கல்வி நிறுவனங்களில் கல்வி பெறுவதற்காக 10 லட்சம் ரூபாய் வரை நிதியுதவிக் கடன்களைப் பெறுவர்.2025 ஆம் நிதியாண்டில் புதிய வருமான வரி வரம்புகளின் கீழ், சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான நிலையான வரி விலக்கு வரம்பானது 50,000 ரூபாயிலிருந்து 75,000 ரூபாயாக உயர்த்தப்படும். தங்கம் மற்றும் வெள்ளி மீதான அடிப்படை சுங்க வரியினை 6 சதவீதமாகவும், பிளாட்டினம் மீது 6.4 சதவீதமாகவும் குறைக்க இந்த நிதிநிலை அறிக்கையில் முன் மொழியப்பட்டது. நிதியமைச்சர் தனது நிதிநிலை அறிக்கை உரையில் பீகார் மாநிலத்திற்கான பல்வேறு திட்டங்களை அறிவித்தார் என்பதோடு இந்தத் திட்டங்கள் "பூர்வோதயா" என்ற பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட கிழக்கு மாநிலங்களின் அனைத்து மேம்பாடுகளையும் உள்ளடக்கியது. பீகாரில் மொத்தம் 26,000 கோடி ரூபாய் செலவில் அதிவேக நெடுஞ்சாலைகள் அமைக்க அரசாங்கம் நிதியுதவி அளிக்கும். பெண்கள் தலைமையிலான மேம்பாட்டினை ஊக்குவிப்பதற்காக, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குப் பயனளிக்கும் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்காக வேண்டிஇந்த நிதிநிலை அறிக்கையில் 3 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டு உள்ளது. ஆரம்ப நிலை பூஜ்ஜியம் முதல் 3 லட்சம் ரூபாய் வரையிலான வரிவிகித வரம்பைத்தவிர்த்து, மற்ற ஒவ்வொரு வரி வரம்புகளின் அளவும் மாறாமல் இருப்பதையடுத்து வரி விதிப்பு விகிதம் மாறாமல் உள்ளது. முன்பு 3 லட்சம் ரூபாயிலிருந்து 6 லட்சம் ரூபாய் ஆக இருந்த வரம்பானது தற்போது 3 லட்சம் ரூபாயிலிருந்து 7 லட்சம் ரூபாயாக விரிவுபடுத்தப் படும். இருப்பினும், 5% என்ற வரிவிதிப்பு விகிதம் ஆனது மாறாமல் உள்ளது. இதே போல், மற்ற அடுக்குகள், அதாவது 6 முதல் 9 லட்சம் ரூபாய், 9 முதல் 12 லட்சம் ரூபாய், 12 முதல் 15 லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் என்ற வரம்பானது 7 முதல் 10 லட்சம் ரூபாய், 10 முதல் 12 லட்சம் ரூபாய், 12 முதல் ரூபாய் 15 லட்சம் மற்றும் அதற்கு மேல் என்ற வரம்புகளாகத் திருத்தியமைக்கப்படும்.

Current Affairs

தமிழகப் பள்ளிகளில் உணவுப் பாதுகாப்பு

இந்தியத் தரநிலைகள் வாரியம் (BIS) ஆனது, சமீபத்தில் IS 6541: 2024 தர நிலையினை திருத்தியமைத்துள்ளது என்பதோடு இது பள்ளிகளில் உணவு தயாரிக்க செய்வதற்குத் தேவையான சுகாதாரமான தர நிலைகளையும் பரிந்துரைக்கிறது. BIS ஆனது திருத்தியமைக்கப்பட்ட குறியீட்டினைப் பற்றி விவாதிக்கவும், தமிழகத்தில் தரநிலையைச் செயல்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பை கோருவதற்காகவும் மிக விரைவில் மாநில அரசை அணுக உள்ளது. சமையல் அறைகள் மற்றும் உணவுப் போக்குவரத்து வாகனங்களில் சுகாதாரமான நிலைமைகளைப் பேணுவதற்கான அடிப்படைத் தரத்தினைப் பரிந்துரைப்பதற்காக 1972 ஆம் ஆண்டில் குறியீடு வெளியிடப்பட்டது என்பதோடு மதிய உணவு வழங்கலை மட்டுமே இது உள்ளடக்கியதாகும். புதிய குறியீடானது குழந்தைகள் காப்பகங்கள் உள்ளிட்ட பள்ளிகளின் பல்வேறு நிலைகளில் மிகவும் நன்கு பேண வேண்டிய உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளின் பரந்த வரையறைகளை உள்ளடக்கியது.தற்போது 22 மாதங்கள் வரையிலான வயதுடைய குழந்தைகளுக்கான மையங்கள் விலக்கப் பட்டுள்ளன.

Current Affairs

Global Forest Area Gain

❖ It was titled as the “State of world forest report 2024” by the FAO. ❖ China led the world with the maximum forest area gain of 19,37,000 hectares. ❖ It is followed by Australia with 4,46,000 hectares, and India. ❖ India gained 2,66,000 hectares of forest area annually from 2010 to 2020.  ❖ India securing the third spot among the top 10 countries with the most significant forest area gains during this period. ❖ Other countries in the top 10 include Chile, Vietnam, Turkey, the United States, France, Italy and Romania. ❖ It also said the rate of gross global mangrove loss decreased by 23% during the periods — 2000 to 2010 and 2010 to 2020.