Posts

Current Affairs

பான் பருவநிலை மாநாடு 2024

பான் பருவநிலை மாற்ற மாநாடு என்றும் அழைக்கப்படுகின்ற, பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டின் (UNFCCC) மீதான துணைஅமைப்புகளின் 60வது அமர்வானது சமீபத்தில் நடைபெற்றது. * பருவநிலை நிதியுதவியில் (NCQG) கூடிய விரைவில் புதிய கூட்டு அளவீட்டு இலக்கை அமைக்க இந்த நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது. UNFCCC கட்டமைப்பின் பங்குதார நாடுகளின் 29வது மாநாடு (COP 29) ஆனது இந்த ஆண்டின் இறுதியில் அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற உள்ளது.

Current Affairs

பசுமை சார் கல்விக்கான யுனெஸ்கோவின் புதிய செயற்கருவிகள்

UNESCO அமைப்பின் பசுமை சார் கல்விக் கூட்டாண்மையின் கீழ் பசுமை சார் பாடத் திட்ட வழிகாட்டுதல் (GCG) மற்றும் பசுமை சார் பள்ளி தரத் தரநிலைகள் (GSQS) ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பருவநிலை சார்ந்த கல்வி எதைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் பாடத் திட்டங்களில் சுற்றுச்சூழலைப் பற்றிய கருத்துக்களை உலக நாடுகள் எவ்வாறு பிரதானப் படுத்தலாம் என்பது பற்றிய பொதுவான புரிதலை வழங்கும் ஒரு செயல் முறை கையேடுயாகும். கொள்கை வகுப்பாளர்கள், கல்வி அமைச்சகங்கள், கல்வியாளர்கள், கற்பவர்கள் மற்றும் சமூகங்கள் இந்தத் திட்டத்தின் இலக்காக நிர்ணயிக்கப்பட்டவர்கள் ஆவர்.யுனெஸ்கோ அமைப்பின் சமீபத்தியக் கணக்கெடுப்பில் 100 நாடுகளில் 50% நாடுகள் தங்கள் பாடத் திட்டத்தில் பருவநிலை மாற்றம் பற்றி குறிப்பிடவில்லை. சுமார் 70% இளைஞர்களால் பருவநிலை சீர்குலைவு பற்றி விளக்க முடியவில்லை.

Current Affairs

தேசிய சுகாதார உரிமை கோரல் இணைப்பகம்

அமைச்சகம் மற்றும் இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) ஆகியவை தேசிய சுகாதார உரிமை கோரல் இணைப்பகத்தினை (NHCX) தொடங்குகின்றன. இது காப்பீட்டு நிறுவனங்கள், சுகாதாரத் துறை சேவை வழங்குநர்கள் மற்றும் அரசாங்கக் காப்பீட்டு திட்ட நிர்வாக நிறுவனங்கள் ஆகியவற்றினை ஒன்றிணைக்கும் ஓர் எண்ணிம தளமாகும். தற்போது, நாட்டில் மேற்கொள்ளப்படும் சுகாதாரக் காப்பீட்டுக் கோரல்களுக்கான தீர்வுச் செயல்முறை பெரும்பாலும் கைமுறையாகவும் நேர விரயம் கொண்டதாகவும் உள்ளது. சுகாதார நலம் மற்றும் சுகாதாரக் காப்பீட்டு சூழல் அமைப்பில் உள்ள பல்வேறு பங்கு தாரர்களிடையே உரிமை கோரல்கள் தொடர்பான பல்வேறு தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கான நுழைவாயிலாக NHCX செயல்படும். அனைத்துச் சுகாதார உரிமை கோரல்களுக்குமான மையப்படுத்தப்பட்ட மையமாக செயல்படுவதால், NHCX மருத்துவமனைகளின் மீதான நிர்வாக ரீதியிலான வேலைப் பளுவினைக் கணிசமாகக் குறைக்கும்.

Current Affairs

Bonn Climate Conference 2024

❖ The 60th Session of United Nations Framework Convention on Climate Change (UNFCCC) Subsidiary Bodies, also called the Bonn Climate Change Conference was held recently. ❖ This event has stressed to set a New Collective Quantified Goal on climate funding (NCQG) as soon as possible. ❖ The 29th Conference of Parties (COP 29) to the UNFCCC is going to be held in Baku, Azerbaijan later this year.

Current Affairs

UNESCO’s New Tools for Greening Education

❖ The UNESCO has launched the Greening Curriculum Guidance (GCG) and Green School Quality Standards (GSQS) under the Greening Education Partnership. ❖ It is a practical manual providing, a common understanding of what climate education should consist of and how countries can mainstream environmental topics across curricula. ❖ Policy-makers, education ministries, educators, learners, and communities are the Target Audience. ❖ 50% of 100 countries in recent UNESCO survey have no mention of climate change in their curriculum. ❖ Around 70% of young people could not explain climate disruption.

Current Affairs

National Health Claim Exchange

❖ The Ministry and IRDAI are launching the National Health Claim Exchange (NHCX). ❖ It is a digital platform which will bring together insurance companies, healthcare sector service providers and government insurance scheme administrators. ❖ At present, the health insurance claims settlement process in the country is mostly manual and time-consuming. ❖ The NHCX will serve as a gateway for exchanging claims-related information among various stakeholders in the healthcare and health insurance ecosystem. ❖ Acting as a centralised hub for all health claims, the NHCX will significantly alleviate the administrative burden on hospitals.

Current Affairs

சூரியச் சுடர்களின் சீற்றத்தினைப் படம் பிடித்த ஆதித்யா-L1

இஸ்ரோவின் ஆதித்யா- L1 விண்கலத்தில் உள்ள இரண்டு தொலை உணர் கருவிகள் சமீபத்திய சூரியச் சுடர்களின் சீற்றத்தைப் படம் பிடித்துள்ளன.· சூரியனில் உள்ள AR13664 என்ற அதி தீவிரச் செயல்பாடுகள் மிகுந்த பகுதியில் காணப் படும் பல X - வகை மற்றும் M வகை சுடரொளிகளுடன் இந்த சூரியச் சீற்றம் நிகழ்ந்தது. இந்தியாவின் முதல் சூரிய ஆய்வுப் பயணமான ஆதித்யா- L1 விண்கலம் இந்த ஆண்டு ஜனவரி 06 தேதியன்று முதல் லக்ராஞ்சியன் புள்ளியை (L1) அடைந்தது.L1 புள்ளி பூமியிலிருந்து சுமார் 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் அமைந்து உள்ளதால் விண்கலமானது சூரியனைத் தொடர்ந்து ஆய்வு செய்ய அது உதவுகிறது.

Current Affairs

ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையில் புதிய நாடுகள் இணைவு

ஸ்லோவாக்கியா மற்றும் பெரு ஆகிய நாடுகள் விண்வெளியில் பாதுகாப்பான ஆய்வை மேற்கொள்வதற்கான அமெரிக்க நாட்டின் தலைமையிலான நாசாவின் ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.

Current Affairs

Aditya-L1 Capture Solar Fury

❖ ISRO’s Aditya-L1 spacecraft’s two onboard remote sensing instruments have captured the recent solar fury. ❖ The Active region AR13664 on the Sun erupted several X-class and M-class flares. ❖ India’s maiden solar mission Aditya-L1 reached the Lagrangian point (L1) on January six this year. ❖ L1 is located roughly 1.5 million km from Earth and enables the spacecraft to view the Sun continuously

Current Affairs

புதிய அமைச்சரவைக் குழு அமைச்சர்கள்

புதிய அரசின் முதல் கூட்டம் ஆனது பிரதமர் அவர்களின் தலைமையில் நடைபெற்று இலாகா ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டது. இரண்டு பெண்களுக்கு அமைச்சரவைக் குழுவில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டதுடன் ஏழு பெண் தலைவர்கள் அமைச்சரவைக் குழுவில் சேர்க்கப்பட்டனர். தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கு அமைச்சரவையில் 11 இடங்கள் ஒதுக்கப்பட்டன. உள்துறை, பாதுகாப்பு, நிதி மற்றும் வெளிவிவகாரங்கள் துறை ஆகிய முன்னணி நான்கு அமைச்சகங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொடர்ந்து மூன்றாவது முறையாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக நிதின் கட்கரி பதவியேற்றுள்ளார். மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் வேளாண்மை, விவசாயிகள் நலன் மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சராக நியமிக்கப் பட்டு உள்ளார். அதே நேரத்தில், அமைச்சரவைக் குழு அமைச்சராகப் பதவியேற்றுள்ள பாஜக தலைவர் J.P. நட்டா, சுகாதார அமைச்சகத்தின் பொறுப்பினையும் ஏற்றுள்ளார். ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார், மின்சாரம் மற்றும் வீட்டு வசதி போன்ற முக்கிய இலாகாக்களைக் கொண்டிருப்பார்