Posts

Current Affairs

New mangrove forest

❖ The Tamil Nadu Forest Department has planted around 37,500 mangrove propagules over an extent of 25 hectares at Kudikadu village in Cuddalore district. ❖ This will be carried out under the Green Tamil Nadu Mission. ❖ For the first time, away from the existing mangrove area was identified as the favourable for mangrove plantation. ❖ The Rehabilitation of Coastal Habitats scheme is being implemented for another three years from 2023-24 to 2025-26 covering ten districts.

Current Affairs

துருவா ஸ்பேஸ் நிறுவனத்தின் தைபோல்ட் செயற்கைக்கோள்கள்

தைபோல்ட்-1 மற்றும் தைபோல்ட்-2 செயற்கைக்கோள்களை உள்ளடக்கிய துருவா ஸ்பேஸ் நிறுவனத்தின் முதல் விண்கலம் ஆனது 15,000 சுற்றுகளுக்குப் பிறகு வேறொரு சுற்றுப்பாதைக்குத் திசைதிருப்பப்பட்டது. ஐதராபாத் நகரத்தில் அமைந்துள்ள இந்த விண்வெளிப் புத்தொழில் நிறுவனத்தின் 10வது ஆண்டு விழாவான 2022 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதியன்று இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு வகை வணிக நோக்கம் சாரா வானொலி (ஹாம்  ரேடியோ) இயக்க நிறுவனங்கள் இதில் தகவல்களைப் பெற ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Current Affairs

SN 2023adsy மீவொளிர் விண்முகில்

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தி, மிகவும் தொலை தூரத்தில் அமைந்த la வகை மீவொளிர் விண்முகிலான SN 2023adsy என்ற மீவொளிர் விண்முகிலை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். * மீவொளிர் விண்முகில்கள் (SNe) சக்தி வாய்ந்த மற்றும் ஒளிரும் விண்மீன் வெடிப்பு நிகழ்வுகள் ஆகும். * மீவொளிர் விண்முகில்கள் பொதுவாக அவற்றின் அணு நிறமாலையைப் பொறுத்து இரண்டு குழுக்களாக வகைப்படுத்தப்படுகின்றன. வகை | மீவொளிர் விண்முகில்களின் நிறமாலையில் ஹைட்ரஜன் இல்லை மற்றும் வகை || மீவொளிர் வீண்முகில்கள் நிறமாலையில் ஹைட்ரஜனைக் கொண்டும் உள்ளன. வகை la மீவொளிர் விண்முகில்கள் (SN la) இரட்டை ஈர்ப்பு அமைப்புகளாகக் காணப் படுகின்றன என்ற நிலையில் அவற்றுள் ஒன்று வெண் குறுவிண்மீன் ஆக உள்ளது

Current Affairs

தமிழகத்தில் அருகி வரும் எட்டு தாவர இனங்கள்

அருகி வரும் மற்றும் அரிய தாவரங்களைப் பாதுகாப்பதற்கான தமிழ்நாடு அரசின் திட்டமானது எளிதில் பாதிக்கப்படக்கூடிய, அருகி வரும் மற்றும் மிகவும் அருகி வரும் இனங்கள் நிலைகளில் உள்ள எட்டு வகையான அரிய தாவரங்களை பட்டியலிட்டு உள்ளது. இந்த எட்டு தாவரங்களும் 25 அரிய தாவரங்களின் பட்டியலில் இருந்து பட்டியலிடப் பட்டுள்ளன. இந்த எட்டு இனங்களும் 'பாதுகாப்பு நிலையில் முன்னுரிமை பெற்ற இனங்கள்' என வகைப்படுத்தப்பட்டுள்ளன. சேலத்தில் உள்ள சேர்வராயன் மலைப்பகுதியில் காணப்படும் வெர்னோனியா ஷெவரோயென்சிஸ் மிகவும் அருகி வரும் நிலையில் உள்ள மர இனமாகும். ஏற்காட்டில் உள்ள இந்தியத் தாவரவியல் ஆய்வுத் துறையின் தாவரவியல் பூங்காவில் வெர்னோனியா ஷெவரோயென்சிஸ் மரம் ஒன்று இருந்தது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆனைமலை மலைப் பகுதிகளிலும், வால்பாறை பீட பூமியின் சில இடங்களிலும் காணப்படும் பைலாந்தஸ் அனமலையானஸ் என்பவை மிகவும் அருகி வரும் நிலையில் உள்ள இனமாகும். ஆனைமலை புலிகள் வளங்காப்பகத்தில் காணப்படும் டிப்டெரோகார்பஸ் போர்டில்லோனி மற்றும் கொடைக்கானலில் உள்ள பழனி மலையின் வட்டக்கனல் சோலைக் காடுகளில் காணப்படும் எலேயோகார்பஸ் பிளாஸ்கோய் ஆகியவை அருகி வரும் நிலையில் உள்ள பிற தாவர இனங்கள் ஆகும்.

Current Affairs

Dhruva Space’s Thybolt satellites

❖ Dhruva Space’s maiden satellite mission comprising Thybolt-1 and Thybolt-2 satellites have deorbited after a combined 15,000 orbits. ❖ The mission was launched on November 26, 2022 on the Hyderabad-based space start up’s 10th anniversary. ❖ The mission engaged many ham radio operators across India as well.

Current Affairs

SN 2023adsy Supernova

❖ Using the James Webb Space Telescope, astronomers discovered SN 2023adsy, the most distant Type Ia supernova detected. ❖ Supernovae (SNe) are powerful and luminous stellar explosions. ❖ Supernovae are generally classified into two groups depending on their atomic spectra. ❖ Type I lack hydrogen in their spectra, and Type II displays hydrogen spectral lines. ❖ Type Ia supernovae (SN Ia) are found in binary systems in which one of the stars is a white dwarf.

Current Affairs

Eight endangered florae in TN

❖ Tamil Nadu Government’s mission to conserve endangered and rare flora having shortlisted the eight species of rare plants, which fall under the vulnerable, endangered and critically endangered category. ❖ These eight plants have been shortlisted from a list of 25 rare plants. ❖ The eight species have been categorised as ‘prioritised species’. ❖ Vernonia shevaroyensis that occurs in Shevaroy hills in Salem is a critically endangered tree. ❖ There was one tree of Vernonia shevaroyensis at the Botanical Survey of India’s botanical garden at Yercaud. ❖ Phyllanthus anamalayanus found in Anamalai hills and some locations of the Valparai plateau in Coimbatore district is a critically endangered species. ❖ Dipterocarpus bourdillonii found in the Anamalai Tiger Reserve, and Elaeocarpus blascoi found in Vattakanal shola forests of Palani hills in Kodaikanal are the other plants fall under the critically endangered category.

Current Affairs

மெர்சர் நிறுவனத்தின் அதிக செலவு மிக்க நகரங்களின் பட்டியல்

மும்பை நகரமானது ஆசியாவிலேயே வெளிநாட்டவர்களுக்கு அதிக செலவு மிக்க நகரங்களின் பட்டியலில் தற்போது 21வது இடத்தில் உள்ளது என்ற நிலையில் டெல்லி இதில் 30வது இடத்தில் உள்ளது. மும்பை, உலக அளவில் கடந்த ஆண்டை விட 11 இடங்கள் முன்னேறி இதில் 136வது இடத்தைப் பிடித்துள்ளது. ஹாங்காங், சிங்கப்பூர், சூரிச், ஜெனீவா மற்றும் பெர்ன் ஆகியவை உலகின் அதிக செலவு மிகுந்த முதல் 5 நகரங்கள் ஆகும். இப்பட்டியலின் முதல் 20 இடங்களில் இடம் பெற்ற மற்ற இந்திய நகரங்கள்: புது டெல்லி (164 வது இடம்), சென்னை (189) மற்றும் பெங்களூரு (195) ஆகியனவாகும், மற்றவை ஹைதராபாத் (202), புனே (205) மற்றும் கொல்கத்தா (207) ஆகியனவாகும்.

Current Affairs

புதிய வகை விலாங்கு மீன்

ஒடிசாவின் வெவ்வேறு கழிமுகச் சுற்றுச்சூழல் அமைப்புகளில் புதிய வகை விலாங்கு மீன் இனத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். அந்த மாநில மீன்வளத் துறையின் முன்னாள் இணை இயக்குநரான சூர்ய குமார் மொஹந்தியை கௌரவிக்கும் வகையில் இந்தப் புதிய இனத்திற்கு 'ஓபிச்தஸ் சூர்யாய்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய இனங்கள் அதனுடன் நெருங்கிய தொடர்புடைய ஒரே இனத்தினைச் சேர்ந்த ஓஃபிச்தஸ் அலெனி, ஓஃபிச்தஸ் சோபிஸ்டியஸ் மற்றும் ஓஃபிச்தஸ் அல்டிபென்னிஸ் ஆகியவற்றிலிருந்து வேறுபட்டுக் காணப்படுகின்றன. ஆசியாவின் மிகப்பெரிய உவர் நீர் எரியான சிலிக்கா ஏரியில் இந்த இனங்கள் காணப் படுகின்றன.

Current Affairs

புதிய தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் 2024

தமிழ்நாடு மாநிலத் தொல்லியல் துறையானது கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் உட்பட தமிழகம் முழுவதும் எட்டு இடங்களில் தொல்லியல் அகழாய்வுகளை தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு நான்கு புதிய இடங்களில் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கப் பட்டு உள்ளன.  சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வுப் பணிகளும், கொந்தகையில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. மற்ற இடங்களாவன, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் 3வது கட்டம், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டியில் 2வது கட்டம், புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக் கோட்டையில் 2வது கட்டம் மற்றும் தென்காசி மாவட்டம் திருமால் புரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னூர், திருப்பூர் மாவட்டம் கொங்கல்நகரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் மருங்கூர் ஆகிய இடங்களில் முதல் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன.