Published on Oct 28, 2024
Current Affairs
40 மலையேற்றப் பாதைகள்
40 மலையேற்றப் பாதைகள்
  • தமிழ்நாடு வனத்துறையானது 40 வழித்தடங்கள் அடங்கிய ஒரு விரிவான பட்டியலை உருவாக்கியுள்ளது. இது 'ட்ரெக் தமிழ்நாடு' திட்டத்தின் கீழ் 40 மலைப்பாதைகளுக்கானப் பதிவுகளைக்கொண்ட ஒரு இணைய தளத்தினையும் அறிமுகப்படுத்தியுள்ளது. www.trektamilnadu.com என்ற இந்த இணைய தளமானது இயங்கலை வழியிலான முன் பதிவுகளை மேற்கொள்ள வழிவகை செய்கிறது.
  • * 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் மலையேற்றத்திற்கு வேண்டி முன்பதிவு செய்ய அனுமதிக்கப் படுகிறார்கள். 18 வயதுக்குட்பட்ட அனைவரும் பெற்றோர் / பாதுகாவலரின் ஒப்புதல் கடிதத்துடன் மலையேற்றம் செய்யலாம். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு என்று மட்டும் (எளிதான மலையேற்றங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்) பெற்றோர் அல்லது பாதுகாவலரின் துணை தேவை. நீலகிரி, கொடைக்கானல் மற்றும் கன்னியாகுமரி போன்ற பிரபலமான இடங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் 14 மாவட்டங்களில் இந்த 40 தேர்ந்தெடுக்கப்பட்டப் பாதைகள் அமைந்துள்ளன.
  • * மலையேற்றங்கள் ஆனது 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு வன மற்றும் வனவிலங்குகள் (மலையேற்றம் ஒழுங்குமுறை) விதிகளுக்கு இணங்க உள்ளன.