Published on Jul 8, 2024
Current Affairs
24வது SCO உச்சி மாநாடு
24வது SCO உச்சி மாநாடு
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 2024 ஆம் ஆண்டு உச்சி மாநாடு கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் நடைபெற்றது.இந்த மாநாட்டில் அஸ்தானா பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதோடு மேலும், ஆற்றல், பாதுகாப்பு, வர்த்தகம், நிதி மற்றும் தகவல் பாதுகாப்பு தொடர்பான 25 உத்தி சார் ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 10வது உறுப்பினர் நாடாக பெலாரஸ் இடம் பெற்றுள்ளது.
  • ஷாங்காய் 5 அமைப்பானது 1996 ஆம் ஆண்டில் 5 உறுப்பினர்களுடன் உருவானது.
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பானது 2001 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதியன்று ஷாங்காய் நகரில் நிறுவப் பட்டதோடு, உஸ்பெகிஸ்தானை அந்த அமைப்பின் ஆறாவது உறுப்பினராக இணைத்தது.
  • ஆப்கானிஸ்தான் மற்றும் மங்கோலியா ஆகியவை பார்வையாளர் நாடுகள் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளன.