Verify it's really you

Please re-enter your password to continue with this action.

Published on May 26, 2024
Current Affairs
2024 ஆம் ஆண்டில் வண்ணத்துப்பூச்சிகளின் இடம்பெயர்வு
2024 ஆம் ஆண்டில் வண்ணத்துப்பூச்சிகளின் இடம்பெயர்வு
  • தமிழ்நாடு மாநிலத்தில், இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களில் இருந்து சமவெளி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கு வண்ணத்துப் பூச்சிகள் அதிக அளவில் இடம் பெயர்ந்துள்ளன.
  • அதைத் தொடர்ந்து கோடை மாதத்தில் மாநிலம் முழுவதும் பெய்த பருவமழைக்கு முந்தைய மழைப் பொழிவு ஏற்பட்டது.
  • 2013 ஆம் ஆண்டு முதல் இயற்கை மற்றும் வண்ணத்துப்பூச்சி சங்கத்தின் கண்காணிப்புகளின் படி, 2016 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலத்தில் வறட்சி போன்ற சூழ்நிலைகள் ஏற்பட்ட போது வண்ணத்துப்பூச்சிகள் இடம்பெயர்வு பதிவாகவில்லை.
  • 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் அவற்றின் இடம்பெயர்வு மேம்பட்டிருந்தாலும், 2019 ஆம் ஆண்டில் இது குறைந்துள்ளது.
  • தென்மேற்குப் பருவமழைக்கு முன்னதாக பதிவான இந்த ஆண்டு இடம்பெயர்வானது கடந்த சில ஆண்டுகளில் இருந்ததை விட ஆரோக்கியமான ஒன்றாக இருப்பதாக இயற்கை மற்றும் வண்ணத்துப்பூச்சி சங்கம் (TNBS) கருதுகிறது.