Published on Jun 27, 2024
Current Affairs
125வது ஆண்டு நிறைவு தினம் ஊட்டி மலை இரயில்
125வது ஆண்டு நிறைவு தினம் ஊட்டி மலை இரயில்
  • மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரையிலான இரயில் பாதையானது பிரிட்டிஷ் காலனி ஆட்சியின் போது 1899 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதியன்று போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்ட நிலையில் பின்னர் அது உதகை மலை வாழிடம் வரையில் நீட்டிக்கப்பட்டது.
  • சர் இராபர்ட் ஸ்டேன்ஸ் தலைமையில் ஒரு 'இரயில்வே குழு' நிறுவப்பட்டு பின் குன்னூர் இரயில்வே நிறுவனம் (லிமிடெட்) என்று அழைக்கப்படுகின்ற லிமிடெட் கூட்டுப் பங்கு நிறுவனம் ஆனது 1880 ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்டது.பின்னர் 1896 ஆம் ஆண்டில் வேறு புதிய நீலகிரி இரயில்வே நிறுவனம் உருவாக்கப் பட்டது.
  • இந்த இரயில் பாதையானது இறுதியாக 1899 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் திறக்கப் பட்டது என்பதோடு அது ஓர் ஒப்பந்தத்தின் கீழ் சென்னை இரயில்வே நிர்வாகத்தினால் இயக்கப்பட்டது.
  • யுனெஸ்கோ அமைப்பானது 2005 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதியன்று நீலகிரி மலை இரயில் பாதையை உலகப் பாரம்பரியத் தளமாக அறிவித்தது.