Published on Nov 24, 2024
Current Affairs
12 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த சோழர் காலத் தூண்
12 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த சோழர் காலத் தூண்
  • * 12 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த சோழர் காலத்து கல் தூண் ஒன்று, கடலூரில் உள்ள பழூரில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
  •  கி.பி. 1125 ஆம் ஆண்டில் செதுக்கப்பட்ட இந்தத் தூண் ஆனது, கிராம மக்கள் அங்குள்ள சிவன் கோயிலுக்கு நிலங்களை வழங்கியதைக் குறிக்கிறது.
  • இது விக்கிரம சோழனின் ஆட்சியின் 5வது ஆண்டுடன் தொடர்புடையது.
  • * இந்தத் தூணில் செதுக்கப்பட்டுள்ள கல்வெட்டின்படி, கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் பதினாலு அடிக்கோல் எனப்படுகின்ற சோழர் அளவீட்டு முறையை நன்கு பயன்படுத்தி அளவிடப்பட்டுள்ளன.