Published on Oct 14, 2024
Current Affairs
ஹரியானா மற்றும் ஜம்மு & காஷ்மீர் தேர்தல்
ஹரியானா மற்றும் ஜம்மு & காஷ்மீர் தேர்தல்
  • ஜம்மு & காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி (NC) மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. * 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஓர் ஒன்றியப் பிரதேசமாகவும், 370வது சரத்து நீக்கப்பட்ட பிறகும் நடைபெறும் முதல் சட்டமன்றத் தேர்தல் இதுவாகும்.
  • ஹரியானாவில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைத்து வரலாறு படைத்துள்ளது. அங்கு பாஜக 48 இடங்களிலும், காங்கிரஸ் 37 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
  • ஜம்மு & காஷ்மீரின் 90 இடங்களில், NC கட்சி மற்றும் காங்கிரஸ் 49 இடங்களிலும், பா.ஜ.க 29 இடங்களிலும், மக்கள் ஜனநாயக கட்சி (PDP) 3 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளன.