Published on Nov 29, 2024
Current Affairs
விழுதுகள் - ஒற்றைத் தீர்வு மையம்
விழுதுகள் - ஒற்றைத் தீர்வு மையம்
  • சென்னை நகரில் சோழிங்கநல்லூரில் உள்ள கண்ணகி நகரில் அமைக்கப்பட்டுள்ள விழுதுகள் ஒற்றைத் தீர்வு மையத்தினை' தமிழக முதல்வர் அவர்கள் திறந்து  வைத்தார்.
  • இது மாற்றுத் திறனாளிகளுக்கான உடல்நலம் தொடர்பான மறுவாழ்வு சேவைகளை வழங்குகிறது. மாற்றுத் திறனாளிகள் நலத் துறையால் நிறுவப்பட்ட இது உலக வங்கியின் நிதி உதவியுடன் கூடிய தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் அங்கமாகும்.
  • இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 273 மையங்கள் நிறுவப்பட உள்ளன. சிறப்புக் கல்வி, பார்வை அளவீட்டியல், கேட்பியல் மற்றும் பேச்சு பயிற்சி மருத்துவம், உடலியக்க மருத்துவம், செய்தொழில் தொடர்பான சிகிச்சை முறை மற்றும் உளவியல் ஆலோசனை ஆகிய மறுவாழ்வு வல்லுநர்கள் ஒரே கட்டமைப்பின் கீழ் பணியாற்றுவது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும்.