மாநிலத் திட்ட ஆணையமானது (SPC), தொழில் முறை சார்ந்தப் பாதிப்புகள் உட்பட பல்வேறு துறைகளில் ஏற்படும் பாதிப்புகளைக் கண்காணித்து அதற்கான முக்கியப் பரிந்துரைகளை வழங்கியுள்ளது. 'Beating The Heat-Tamil Nadu Heat Mitigation Strategy தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
வெளிப்புறத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், முறைசாராத தொழிலாளர்கள், இயங் கலை வழி ரீதியில் திரட்டப்படும் தொழிலாளர்கள், இயந்திர/உட்புற வெப்பம் நிறைந்த சூழலில் பணியாற்றும் தொழிலாளர்கள் போன்ற பல பெரும் பாதகமான வேலைச் சூழ்நிலைகளில் உள்ள மக்களின் பிரச்சினையை இந்த அறிக்கை குறிப்பிட்டுக் காட்டி உள்ளது. கால்நடை வளர்ப்பு, மீன்வளம், காடுகள் மற்றும் சதுப்புநிலங்கள் ஆகியவற்றில் உள்ள சவால்களையும் இந்த அறிக்கை குறிப்பிட்டு, அதற்கான முக்கியப் பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
சில பரிந்துரைகள்: 0 வெப்ப அழுத்தக் குறியீடுகள், அணியக் கூடிய வகையிலான வெப்ப உணர்விக் கருவிகள் அல்லது வானிலைக் கண்காணிப்பு அமைப்புகள் மூலம் பணியிடத்தில் வெப்பத் தாக்க அளவைக் கண்காணிப்பதற்கான வழிமுறைகளை நிறுவுதல் முதலுதவிக்கான பல்வேறு நெறிமுறைகள், மருத்துவச் சேவையை அணுகுதல் மற்றும் ஆபத்தின் போது தொழிலாளர்களை வெளியேற்றுதல் உள்ளிட்ட வெப்பம் தொடர்பான சம்பவங்களுக்கான அவசரகால எதிர் நடவடிக்கைத் திட்டங்களை உருவாக்குதல்.