Published on Jun 24, 2024
Current Affairs
வாதவன் துறைமுகத் திட்டம்
வாதவன் துறைமுகத் திட்டம்
  • மகாராஷ்டிராவில் தஹானுவுக்கு அருகில் உள்ள வாதவனில் அனைத்துப் பருவ நிலையிலும் இயங்கக் கூடிய வகையிலான ஆழ்கடல் துறைமுகத்தினை உருவாக்கச் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
  • இந்த துறைமுகம் ஆனது, பெரிய கொள்கலன் கப்பல்களுக்கு இடமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம் (JNPA) மற்றும் மகாராஷ்டிரா கடல்சார் வாரியம் (MMB) ஆகியவற்றால் இணைந்து கட்டமைக்கப்பட உள்ளது. இதற்கான மொத்தச் செலவினம் ஆனது தோராயமாக 76,220 கோடி ரூபாய் ஆகும். முதல் கட்டம் 2029 ஆம் ஆண்டிலும், இரண்டாவது கட்டம் 2037 ஆம் ஆண்டிலும் செயல் பாட்டிற்கு கொண்டு வரப்படும் வகையில் இது இரண்டு கட்டங்களாக உருவாக்கப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் துறைமுகம் ஆனது, 23 மில்லியன் TEU (20-அடிக்குச் சமமான அலகுகள்) சரக்குகளைக் கையாளும் திறன் கொண்டிருக்கும். இது இயற்கை சார்ந்த பல வரம்புகள் காரணமாக இந்தியாவில் உள்ள வேறு எந்தத் துறைமுகத்திலும் இல்லாத திறன் ஆகும்.
  • இது ஒவ்வொன்றும் சுமார் 1000 மீட்டர் நீளம் கொண்ட, சுமார் 24,000 TEU அலகுகளை ஏற்றிச் செல்லும் வகையிலான உலகின் மிகப்பெரிய கப்பல்களை நிறுத்த உதவும் வகையிலான ஒன்பது கொள்கலன் கப்பல் முனையங்களைக் கொண்டிருக்கும்.