Published on Jul 5, 2024
Current Affairs
வெங்கையா நாயுடு அவர்களின் வாழ்க்கைப் பயணம் மீதான புத்தகம்
வெங்கையா நாயுடு அவர்களின் வாழ்க்கைப் பயணம் மீதான புத்தகம்
  • இந்தியாவின் முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் M. வெங்கையா நாயுடு அவர்களின் வாழ்க்கை மற்றும் பயணம் குறித்த பின்வரும் மூன்று புத்தகங்களைப் பிரதமர் அவர்கள் வெளியிட்டார்.
  • "Venkaiah Naidu: Life in Service" என்ற தலைப்பிலான முன்னாள் துணைக் குடியரசுத் தலைவரின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகமானது S. நாகேஷ் குமார் என்பவரால் எழுதப் பட்டதாகும்.
  • "Celebrating Bharat: The Mission and Message of M Venkaiah Naidu as 13th Vice-President of India" என்ற டாக்டர் I.V. சுப்பா ராவ் என்பவரால் தொகுக்கப்பட்ட ஒரு புகைப்படக் குறிப்பு புத்தகமாகும்.  "Mahaneta: Life and Journey of M. Venkaiah Naidu" என்ற தலைப்பிலான புத்தகமானது நாயுடு அவர்களின் சித்திர வடிவ வாழ்க்கை வரலாற்றுப் புத்தகமாகும்.