Published on Aug 30, 2024
Current Affairs
வங்கிகளால் நிதியளிக்கப்படும் தனியார் துறை திட்டங்கள்
வங்கிகளால் நிதியளிக்கப்படும் தனியார் துறை திட்டங்கள்
  • தமிழகத்தில் 2022-23 ஆம் ஆண்டில் சுமார் 44 ஆக இருந்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் நிதியளிக்கப்பட்ட தனியார் துறை திட்டங்களின் எண்ணிக்கை என்பது 2023-24 ஆம் ஆண்டில் 83 ஆக அதிகரித்துள்ளது.
  • 2023-24 ஆம் ஆண்டில் ஒட்டு மொத்த திட்ட மதிப்பான 3,90,978 கோடி ரூபாயில் மாநில அரசு நிதியின் பங்கு 3% ஆகக் குறைந்தது. 2022-23 ஆம் ஆண்டில் மொத்தத் திட்டச் செலவினமான 2,66,546 கோடி ரூபாயில் மாநில அரசின் பங்கு 4.8% ஆக இருந்தது. தமிழகத்தில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் நிதியளிக்கப்படும் தனியார் துறை திட்டங்களின் எண்ணிக்கை 2021-22 ஆம் ஆண்டில் 40 ஆக இருந்தது. 
  •  வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் நிதியளிக்கப்படும் திட்டங்களின் மாநில வாரியான பரவலானது ஐந்து முன்னணி மாநிலங்களான குஜராத் (14.7%), மகாராஷ்டிரா (11.7%), கர்நாடகா (11.1%), ஆந்திரப் பிரதேசம் (10.1%) மற்றும் உத்தரப் பிரதேசம் (7.6%) என தெரிய வந்துள்ளது. இவை ஒட்டு மொத்தமாக 2023-24 ஆம் ஆண்டில் அனுமதிக்கப்பட்ட திட்டங்களின் மொத்தச் செலவில் 55 சதவீதத்தினைக் கொண்டிருந்தன. 2018-19 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது, மொத்தத் திட்ட மதிப்பீட்டில் அரசின் பங்கின் அடிப்படையில் 2023-24 ஆம் ஆண்டில் தமிழ்நாடு 12வது இடத்தில் உள்ளது.