Published on Jul 25, 2024
Current Affairs
லட்கா பாஹு யோஜனா - மகாராஷ்டிரா
லட்கா பாஹு யோஜனா - மகாராஷ்டிரா
  • மகாராஷ்டிரா மாநில அரசானது, பெண்களுக்காக 'மஜ்ஹி லட்கி பஹின் யோஜனா' என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இளையோர்களுக்கு வேலைவாய்ப்புப் பயிற்சி மற்றும் உதவித் தொகை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய திட்டத்தையும் அதன் முதலமைச்சர் அறிமுகப் படுத்தி உள்ளார்.தற்காலிகமாக 'லட்கா பாவ்' யோஜனா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த முன்னெடுப்பு என்பது, 'முக்கிய மந்திரி யுவ காரிய-பிரஷிக்ஷன் யோஜனா' என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • இந்தத் திட்டம் ஆனது தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையுடன் கூடிய வேலைவாய்ப்புப் பயிற்சியினை அளிப்பதன் மூலம் வேலை வாய்ப்பின்மையை நிவர்த்தி செய்ய முயல்கிறது.கல்வித் தகுதிகளின் அடிப்படையில் பின்வரும் அளவில் மாதாந்திர உதவித்தொகை வழங்குவது என்ற அமைப்புடன், 12 ஆம் வகுப்பு கல்வியை முடித்தவர்களை இந்த திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது:12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.6,000,பட்டயப் படிப்பு (டிப்ளமோ) பெற்றவர்களுக்கு ரூ.8,000, மற்றும்
  • இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.10,000.