Verify it's really you

Please re-enter your password to continue with this action.

Published on Jul 16, 2024
Current Affairs
மேல் மட்ட சியாங் நதி நீர்மின் ஆற்றல் உற்பத்தி நிலையம்
மேல் மட்ட சியாங் நதி நீர்மின் ஆற்றல் உற்பத்தி நிலையம்
  • மேல் மட்ட சியாங் நதி நீர்மின் ஆற்றல் உற்பத்தி நிலையமானது, அருணாச்சலப் பிரதேசத்தின் மேல் மட்ட சியாங் மாவட்டத்தில் சியாங் நதியின் மீது அமைக்கப்பட உள்ள 11,000 மெகாவாட் திறன் கொண்ட நீர்மின் ஆற்றல் உற்பத்தி நிலையமாகும்.
  • திபெத்தில் உள்ள கைலாஷ் மலைக்கு அருகில் சியாங் நதி உருவாகிறது என்ற நிலையில் அங்கு இது சாங்போ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
  • சியாங் நதிப் படுகையில் மொத்தம் 29 நீர்மின் ஆற்றல் உற்பத்தி நிலையங்கள் (25 மெகா வாட்டிற்கும் மேலான நிறுவப்பட்ட திறன் கொண்டவை) உள்ள நிலையில் இவற்றின் ஒருங்கிணைந்த நிறுவல் திறன் 18,326 மெகாவாட் ஆகும்.
  • தற்போது முன்மொழியப்பட்ட மேல் மட்ட சியாங் நதி நீர்மின் ஆற்றல் உற்பத்தி நிலையத்தின் நிறுவப்பட்ட திறனானது இந்த மதிப்பில் தோராயமாக 60% பங்கினைக் கொண்டிருக்கும்.
  • இது அதி பழங்குடியினத்தைச் சேர்ந்த மக்கள் வாழும் சுமார் 300க்கும் மேற்பட்ட கிராமங்களை மூழ்கடிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து உள்ளனர்.