Published on Sep 10, 2024
Current Affairs
மாற்றுத் திறனாளிகளுக்கான பாரீஸ் ஒலிம்பிக் போட்டி 2024 - பதக்கப் பட்டியல்
மாற்றுத் திறனாளிகளுக்கான பாரீஸ் ஒலிம்பிக் போட்டி 2024 - பதக்கப் பட்டியல்
  • ஜூடோ வீரரான கபில் பர்மார் (மத்தியப் பிரதேசம்), மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் ஜூடோ போட்டியில் இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்று வரலாறு படைத்து உள்ளார். ஆடவருக்கான உயரம் தாண்டுதல் T64 இறுதிப் போட்டியில் பிரவீன் குமார் (உத்தரப் பிரதேசம்) 2.08 மீ உயரம் தாண்டி சாதனை படைத்து தங்கம் வென்றுள்ளார்.
  •  ஆடவருக்கான குண்டெறிதல் F57 பிரிவில் இந்திய வீராங்கனை ஹொகாடோ ஹோடோஜெ செமா (நாகாலாந்து) வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். சீனா (220), கிரேட் பிரிட்டன் (124), அமெரிக்கா (105), பிரேசில் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் இப்பதக்கப் பட்டியலில் மொத்தப் பதக்கங்களின் எண்ணிக்கையில் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன.
  • மாற்றுத் திறனாளிகளுக்கான பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை ஏழு தங்கம், ஒன்பது வெள்ளி மற்றும் 13 வெண்கலம் உட்பட 29 ஆக நிறைவானது.
  •  இது நாட்டிற்கு அதிக பதக்கங்களை பெற்றுத் தந்த போட்டி பங்கேற்பாக அமைந்தது. * இதில் தடகளப் போட்டிகளில் 17 பதக்கங்கள் பெறப்பட்டன, அவற்றில் நான்கு தங்கப் பதக்கங்கள் ஆகும். மாரியப்பன் தங்கவேலு (தமிழ்நாடு) மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற ஒரு பெருமையினைப் பெற்றுள்ளார்.
  • 2016 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கமும், 2020 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கமும் வென்றார். 2024 பதக்கப் பட்டியலில் இந்தியா 18வது இடத்தில் உள்ளது.