Published on Sep 7, 2024
Current Affairs
மாற்றுத் திறனாளிகளுக்கான பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் 2024 (திருத்தப் பட்டது)
மாற்றுத் திறனாளிகளுக்கான பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் 2024 (திருத்தப் பட்டது)
  • தமிழ்நாட்டைச் சேர்ந்த  துளசிமதி முருகேசன் மற்றும் மனிஷா ராமதாஸ், இருவரும்  வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனர் - பெண்கள் ஒற்றையர் SU5 பிரிவு.
  • இந்திய பாரா ஷட்டில்லர்களான துளசிமதி முருகேசன் மற்றும் மனிஷா ராமதாஸ்,
    தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவரும் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனர்
    பெண்கள் ஒற்றையர் SU5 பிரிவு.
  • பூப்பந்தாட்டப் போட்டியில் ஒரு பதக்கத்தை வென்ற முதல் இந்தியப் பெண்ணாக துளசி உருவெடுத்துள்ளார்.
  • இந்தியப் பூப்பந்தாட்ட வீரரான உத்தரப் பிரதேசத்தின் சுஹாஸ் யதிராஜ் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் தனது இரண்டாவது வெள்ளிப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
  • 2024 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளின் கலப்பு பிரிவு வில்வித்தைப் போட்டியில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஷீத்தல் தேவி மற்றும் ராகேஷ் குமார் வெண்கலம் வென்றனர்.
  • * ஆடவர் ஒற்றையர் SL3 பேட்மிண்டன் போட்டியில் அரியானாவின் நிதேஷ் குமார் தங்கப் பதக்கம் வென்றார்.
  • ஆடவர் வட்டு எறிதல் F56 போட்டியில் இந்தியாவின் அரியானாவின் யோகேஷ் கதுனியா தொடர்ந்து இரண்டாவது முறையாக வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். ஆடவருக்கான உயரம் தாண்டுதல் T47 இறுதிப் போட்டியில் இமாச்சலப் பிரதேசத்தின் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.