Published on Oct 22, 2024
Current Affairs
மர்மமான பழுப்பு நிறக் குறு விண்மீன்கள்
மர்மமான பழுப்பு நிறக் குறு விண்மீன்கள்
  • 1995 ஆம் ஆண்டில், பூமியிலிருந்து சுமார் 19 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்து உள்ள கிலியீஸ் 229 எனப்படும் ஒரு செந்நிறக் குள்ள நட்சத்திரத்தினை (குறு விண்மீன்) சுற்றி வரும் பழுப்பு நிறக் குள்ளக் கோளினை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
  •  கிலியீஸ் 2298 எனப்படுகின்ற இந்தப் பழுப்பு நிறக் குள்ள நட்சத்திரமானது அதிக நிறை மிக்கதாக இருந்தாலும் மங்கலாக தென்பட்டது.
  •  அதன் நிறையானது சுமார் 70 வியாழன் கோளின் நிறைக்குச் சமமாகும் என்பதோடு தொலைநோக்கி மூலம் பதிவு செய்யப்பட்டதை விட அது பிரகாசமாக இருந்திருக்க வேண்டும். கிலியீஸ் 229B ஆனது ஒரு இரட்டை விண்மீனாக இருக்கலாம் என அறிவியலாளர்கள் சந்தேகிக்கித்தனர். மிகச் சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் கிலியீஸ் 2298 ஆனது வியாழனின் நிறையில் 38 மற்றும் 34 மடங்கு நிறை கொண்ட இரண்டு பழுப்பு நிறக் குள்ள நட்சத்திரங்களைக் கொண்டுள்ளது (கிலியீஸ் 229 Ba மற்றும் கிலியீஸ் 229 Bb).
  •  அவை 12 நாட்கள் மற்றும் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தை விட 16 மடங்கு இடைவெளியுடன் ஒன்றையொன்று சுற்றி வருகின்றன. பதிவு செய்யப்பட்ட இப்பிரகாச அளவுகள் ஆனது, இந்த நிறை அளவு வரம்பில் உள்ள இரண்டு சிறிய பழுப்பு நிறக் குள்ளக் கோள்களுக்கான எதிர்பார்க்கப்படும் பிரகாச அளவுகளுடன் பொருந்துகின்றன.