Verify it's really you

Please re-enter your password to continue with this action.

Published on Aug 18, 2024
Current Affairs
மருந்து எதிர்ப்புத் திறன் கொண்ட காசநோய்க்கான புதிய சிகிச்சை 2024
மருந்து எதிர்ப்புத் திறன் கொண்ட காசநோய்க்கான புதிய சிகிச்சை 2024
  • பல/விரிவான மருந்து-எதிர்ப்பு திறன் கொண்ட காசநோயாளிகளுக்கு BPaL (பெடா குலைன், ப்ரீடோமானிட் மற்றும் லைன்ஜோலிட்) என்ற மருந்து தொகுப்புகளை வழங்க இந்தியா தயாராகி வருகிறது.
  • இந்தப் புதிய மருந்துத் தொகுப்புடன் M/XDR காசநோய்ப் பாதிப்பிற்கு மிகவும் எதிரான இந்தியாவின் போராட்டத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.
  • இந்தச் சிகிச்சை முறையானது பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, உக்ரைன் போன்ற நாடுகளில் நல்ல விளைவுகளை வழங்கியுள்ளது.
  • தற்போது, இந்தியாவில் MDR/RR-TB நோயாளிகளுக்கான சிகிச்சைகளின் பலனளிப்பு விகிதம் 56% ஆகவும், XDR-TB நோயாளிகளுக்கான சிகிச்சையின் பலனளிப்பு விகிதம் 48% ஆகவும் உள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில், உலக சுகாதார அமைப்பானது BPaL (பெடாகுலைன், ப்ரீடோமானிட் மற்றும் லைன்ஜோலிட்) மற்றும் BPaLM (பெடாகுலைன், ப்ரீடோமானிட் மற்றும் லைன்ஜோலிட் + மாக்ஷிஃப்லாக்சின்) ஆகிய ஆறு மாத மருந்து தொகுப்பு சிகிச்சைமுறைகளை மருந்து-எதிர்ப்பு திறன் கொண்ட காசநோய்ப் பாதிப்பிற்கான சிகிச்சை விருப்பத் தேர்வுகளாக பரிந்துரைத்தது.
  • இந்தியாவில் 2015 ஆம் ஆண்டில் 1.4 லட்சமாக இருந்த மருந்து எதிர்ப்பு திறன் கொண்ட காசநோய் பாதிப்பு ஆனது 2022 ஆம் ஆண்டில் 21% குறைந்து 1.1 லட்சமாக உள்ளது.