மெர்சர் நிறுவனத்தின் அதிக செலவு மிக்க நகரங்களின் பட்டியல்
மும்பை நகரமானது ஆசியாவிலேயே வெளிநாட்டவர்களுக்கு அதிக செலவு மிக்க நகரங்களின் பட்டியலில் தற்போது 21வது இடத்தில் உள்ளது என்ற நிலையில் டெல்லி இதில் 30வது இடத்தில் உள்ளது.
மும்பை, உலக அளவில் கடந்த ஆண்டை விட 11 இடங்கள் முன்னேறி இதில் 136வது இடத்தைப் பிடித்துள்ளது.
ஹாங்காங், சிங்கப்பூர், சூரிச், ஜெனீவா மற்றும் பெர்ன் ஆகியவை உலகின் அதிக செலவு மிகுந்த முதல் 5 நகரங்கள் ஆகும்.
இப்பட்டியலின் முதல் 20 இடங்களில் இடம் பெற்ற மற்ற இந்திய நகரங்கள்: புது டெல்லி (164 வது இடம்), சென்னை (189) மற்றும் பெங்களூரு (195) ஆகியனவாகும்,
மற்றவை ஹைதராபாத் (202), புனே (205) மற்றும் கொல்கத்தா (207) ஆகியனவாகும்.