Published on Oct 16, 2024
Current Affairs
மனித உரிமைகள் சபையின் உறுப்பினர்கள்
மனித உரிமைகள் சபையின் உறுப்பினர்கள்
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது, 2025-2027 ஆண்டின் பதவிக் காலத்திற்கான 47 உறுப்பினர்களைக் கொண்ட மனித உரிமைகள் சபைக்கு 18 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.
  • பெனின், பொலிவியா, கொலம்பியா, சைப்ரஸ், கத்தார், தாய்லாந்து உள்ளிட்ட 18 நாடுகள் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டன.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் நாடுகள் அடுத்த ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி தொடங்கி மூன்றாண்டு பதவிக் காலம் வரை பதவியில் இருக்கும்.
  • ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் சபையானது ஐக்கிய நாடுகள் அமைப்புக்குள் உள்ள ஓர் அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.
  • உலகம் முழுவதும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்குமானப் பொறுப்பினை இது கொண்டுள்ளது.
  • சவுதி அரேபியா இந்த வாக்கெடுப்பில் ஆறாவது இடத்தைப் பெற்று இந்த சபையில் அங்கத்துவத்தினைப் பெறத் தவறியது